வெறும்வர்ணங்களால்
வடுக்கள் மறைந்து
போவதில்லை
... காயப்பட்ட
சொந்தமெல்லாம்
கதறி கதறி வந்த
நாட்களில்
நானும்
காயத்துடன் கிடந்தேன்
வயிறு பிழந்து
வலிகளுடன;
...................................
அனாதரவானர்கள்
வீதிகளில்....
இன்று
வர்ணங்களால்
மறைக்கப்பட்ட
என் சுவர்களின்
வெடிப்புக்களிலிருந்து
என் ஆத்மா
அழுகிறது
நான் எல்லாம் ஓர்
வைத்தியசாலையா?
என
என்னால் கைவிடப்பட்டு
இறந்து போன உயிர்களின்
மனச்சாட்சிகுள்
இறந்து கொண்டிருக்கறேன்
.தினமும்See
.
////இன்று
ReplyDeleteவர்ணங்களால்
மறைக்கப்பட்ட
என் சுவர்களின்
வெடிப்புக்களிலிருந்து//// வலி மிகுந்த வரிகள்...பாவம் அவையென்ன செய்யும்...
காலங்களும் சூழ்நிலைகளும் வர்ணம் பூசிவிடுகின்றன..ஆனால் உள்ளே சீழ்பிடித்துப் போய் வலிக்கிறது.. மறைத்துக் கொண்டு சிரிக்கிறது இன்னும் ஈழத்தமிழினம்...
உள்ளே சீழ்பிடித்துப் போய் வலிக்கிறது.. மறைத்துக் கொண்டு சிரிக்கிறது இன்னும் ஒ உண்மை கருத்திடலுக்கு நன்றி தோழி............................
ReplyDeleteஎன்னால் கைவிடப்பட்டு
ReplyDeleteஇறந்து போன உயிர்களின்
மனச்சாட்சிகுள்
இறந்து கொண்டிருக்கிறேன்
.தினமும்See ஆச்சரியபட வைக்கிற கவிதை மனம் தெரியும் கவிதை இன்னும் சொல்ல தயங்குகிற அரசியல் யதாரத்தமொன்றை சொல்லியிருக்கிறீர்கள். துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.