Saturday, 19 January 2013

குங்கும கேள்வி.............

அவள் ஏறியிறங்கிய
ஜ.சி.ஆர்.சி களும்
மனித உரிமைகளும்
ஏன் சாமிகளும் கூட
கைவிரித்து நிற்கஇப்போ
நெற் கபேகளில்
சனல்4 லிலும்
வீடியோக்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறாள் தன்
குங்கும கேள்வியை,

ஒவ்வொரு விடிலிலும்
இதயத்தில் இடியாய்
இறங்கும் உணர்வுகள்
கண்கள் பனிக்க
மனம் தடுமாற
சுட்டுவிரலை
வலிந்து பிடித்து
பொட்டிடுகிறாள்
நெற்றியில்,

அவள் இதயத்தின்
அவலத்துடிப்பு
யாருக்கும் புரியாது
அவள்தகிப்பு
கணாமல் போனா
கணவனுடன்
அவள்பொட்டும்
ஏன்
மனைவியின் சிரிப்பும் கூட
காணமலே போகவேனுமாம்
சமுகத்தின் கோட்பாடாம்,

எவரும்திணிக்காத
சுகந்திர உணர்வு
எம்மைபோல்

அவளிலும் வழிகிறது
வெறும் நம்பிக்கையின்
காத்திருப்புக்களோடு

1 comment:

  1. குங்குமக் கேள்விகளோடு எம்தமிழ் பெண்கள் எத்தனைபேர்...எம்தாய் நாட்டில் இதில் சிலருக்கு
    என்றாலும் விடை கிடைக்குமா?..காத்திருப்புக்கள்
    கனவுகள் ஆகுமா..ஆண்டவனே.. எமை ஆண்டவனே.
    ஆண்டவனை மீறி எல்லை புகுந்தவனே..யார் பதில்
    சொல்வீர்...???

    ReplyDelete