Friday, 25 January 2013

துருப்பிடித்த காதல்


நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்


உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்

காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்

அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்

இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது

நீண்ட போரின்
பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்

இருந்தும்
 துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப் பிடித்த
காதலில் தான் ................

10 comments:

  1. காதலில் மட்டும் தான் தனிமயயும் ரசிக்க முடியும்.

    ReplyDelete
  2. Supper................................

    ReplyDelete
  3. தனிமைத் துயர் நிரம்பி வழியும் கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அது என்னை
    பாலைவனத்திற்கு
    அழைத்துசென்று
    மேகங்கள்
    வானில்
    நீந்துவதைக்காட்டும்

    மிக எளிமையான ஆனால் அர்த்தம் நிறைந்த வரிகள். மெல்லியதாக இழையோடும் சோகம் விழுங்கிப்போகிறது இறுதியில் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete