Wednesday, 9 October 2013

நேற்றைய கனவு


நேற்றைய கனவு

வீதியில் ஒரு நாள்
பாரதி வந்தார்
குனிந்த தலையை-நிமிர
மறுத்தார்-ஜயா
என்றேன் பரிவுடன்-என்
கையிலிருந்த
கவிதைதுண்டை
கீழித்தே
போட்டார் -நடு
வீதியில்

அதிர்ந்தே போனேன்
ஆத்திரப்பட்டேன்
சிரித்துக் கொண்டே
சிந்திக்க சொன்னார்

நிமிடங்கள் தோறும்
மனங்களில் வேண்டும்
மகளிர் தினம்
மேடையில் வேண்டாம்
ம் ம்
மௌனித்தே போனேன்

பொய்மையை சொல்லி
பெண்மையை விற்கும்-ஒருசில
ஊடகம் பற்றி
செம்மையாய் நான்கு
செய்தியும் சொன்னார்

எதுகைக்கும்
மோனைக்குமாய்
கவி வடிக்கும்
பெண்ணியவாதி பற்றி
எதிர்த்தே நின்றார்-எம்மை
அழவைத்த நாட்களை
தொலைத்தே நின்றார்

மூடியில்ல
மனிதரை தேடினார்
மரணித்துக் கொண்டேன்

சத்தங்கள் ஓய்ந்தன
இரத்தங்கள் காய்ந்தன
ஈழப்பெண்களின் -வீரம்
இன்னும் இன்னும் ...............

பசியென்று கேட்கின்ற
பாலகனின் முகம் பார்த்து
அழுது வடிக்கின்ற
அன்னையவள் துயர்துடைக்க
எலும்பக்கூடாய் நொய்து -போன
தந்தையவர் பிணி தீர்க்க
சொந்த கரங்களை
தாங்கி நிற்கும்

ஈழ பெண்களின் தீரம் -சொல்லி
உரத்து கத்தினார்

சமூகச் சாக்கடைக்குள்
சாகடிக்க வைக்கும்
பேய்களிடம்........
மாட்டிக்கொண்டு
எதிர்நீச்சல் போடும்
இன்றைய பெண்கள்பற்றி
சற்று அதிகமாயே
ஆதங்கப்பட்டார்

சத்தியமாய் சொல்கின்றேன்
இவை அத்தனையும்

நேற்றைய கனவில்
பாரதி சொன்னது
விழித்துப் பார்த்தேன் -இன்னொரு
புது வாழ்தலுக்காய்
காலைச்சூரியனும்
சாட்சி சொல்லிற்று.............




Thursday, 22 August 2013


கறுப்பும் சிவப்புமாய...........................
அன்றை நாளில் எல்லோரையும் போல் அவனும் ஒரு-போராளி நோயாளி-எனக்கு..!
மென்மையும் குறும்பும் அவனது கண்களின் கொடை! வீரமும் துணிவும் அவன் இலட்சியப்பாதை!
தமிழும்-தன் நாடும்-அவன் உயிரின் மூச்சு!
ஊா் தூங்கிப் போன- ஒர் நாளில் குருதி குடித்திருந்த கட்டுதுணியுடன்-எம் மருத்துவ மனை நுழைந்தான்.........!!!
கூடவே என் தோழனுமானான!்
ஈராறு தடவைகள் வீரப்புண்கள் சுமந்தும் மீள உயிர்வாங்கி மீண்டவன் அவன்..!
சுடலைக் குருவியும் துக்குறிகளும்-அவன் துணிவு கண்டு அஞ்சிப் போனது!
வௌவால்களும் ஆந்தைகளும் அலறத்தொடங்கிய பொழுதொன்றை -மேவிய சன்னங்களும் இடப்பெயர்வுகளும்
தூங்கவிடாது எழுப்பியது அவனை..!
விழுப்புண்ணின் வேதனையை நெஞ்சு மையத்தில் ஒழித்தெழுந்து
பச்சை புண் காயும்-முன்பே சத்தமின்றி ஒற்றை செருப்பை தேடிப் பிடித்தான!்
விடிந்தும் விடியாத காலைக் குளிரில் விடை பெறுதலுடன் நடக்க தொடங்கினான்..!
பின்னொரு நாளில் சத்திர சிகிச்சை அறையில் - நுழைந்தது -அவன் இல்லாத செய்தி மட்டும!்
இப்பொழுது எனைத் தேடி வந்த கடிதத்தில் எழுதியிருந்தது "நான் அவனது அண்ணா அவனைப் போலவே நானும்" கறுப்பும் சிவப்புமாய்...!!
-மிதாயா கானவி் <இது அன்பரசனுக்கு சமர்ப்பணம்

Saturday, 10 August 2013

சறக் சறக்கென சத்தம் எழ
புழுதி பறந்தது

அப்புறமும் இப்புறமும்
புரண்டு புரண்டு
மண்னைக் கோலி-வரப்பாக்கியது
மண்வெட்டி

தோட்டது மண் சுட்டது
வெயில் கொழுத்தியது
குரல் கம்மியது
பசி வயிற்றை
துளை போட்டது

அவளுக்கு எதுவும்
உறைக்கவில்லை

நேற்று படித்த
பத்திரிகை செய்தியை விட

வயிற்று பசிபோக்க
விதவைப் பெண்கள்
விபச்சாரத்தொழிலி

Saturday, 27 July 2013


உடைக்கப்பட்டது 
சமாதிகளே..
சரித்திரங்கள்
இல்லை

Saturday, 13 July 2013

என் தேசத்தை பற்றி................

என்னடி தோழி
எப்படி சுகம்?


சிட்டுக் குருவி
இசை மறந்த எம்
தேசத்தைப்பற்றி
என்னத்தை சொல்ல -நான்

துருப்பிடித்த துப்பாக்கிகள்
எல்லைதாண்டியே வருவதால்
சத்தமின்றி கொல்லும்
சுவாச நோய் பற்றி.......

வாகை மரங்கள்
உதிரும் கண்ணீரில்
அரசமரங்கள்
உயீர்ப்பித்தல்
பற்றி-எப்படி
சொல்ல நான்

வற்றிப் போகாத
வரட்டுப் பிடியில்
ஒற்றை கால்
நிற்கும் கொக்கை-பார்த்து
வெக்கி போகும்
தூரோகத்தை பற்றி
எப்படி சொல்லுவேன்

செம் பருந்தை புணரத்தூரத்தும்
காணங்கோழிகளின்
நப்பாசை பற்றி
யாரிடம் சொல்லுவேன்

ஆறிடா ரணங்களில்
ஆழ்மனதில் பதிந்திட்ட
அவலங்கள் -ஈரம்
காயாமல் இன்னும்
பிசு பிசுக்கும்

புயலடித்த தேசத்தில்
சிதறுண்டு போன
பறவைக் கூட்டங்களின்
இருப்புகள் பற்றி



உயிர்களை நிலைநிறுத்த
உண்மைகளை உரு மறைக்கும்
என் பேனாவை வைத்து
எப்படி சொல்லுவேன்
என் தேசத்தைப்பற்றி.................
 — 

Saturday, 6 July 2013

தனிமை வரைந்த மடல்......................3

என் இனியவனே 
மனமிணைந்திருக்கிறோம் .ஆனால் காலம் நம்மிடையே பிரிவெழுதி இருக்கிறது கவலைப்படாதே என்மனம் சொல்கிறது உனது துயர் விரவில் விலகும் உனது வேதனையை நானும் எனது துயரை நீயம் புரிகிறோம் .அனால் ஒருவர்கொருவர் மறைக்கிறோம் ஆனால்அன்பு அதை வெளியே கொண்டு வந்து விடுகிறது நேற்று உன்னுடன் பேசும்போ
து எனக்குஅழுகைகட்டுபடுத்த முடியவில்லை அதனால்தொடரமுடியாமல்நிறுத்தினேன்
 நான் நம்பிக்கையுன் இருக்கிறேன் உனக்குவிரைவில் குணமாகும் விரைவில் நாம் சந்திப்போம்
அன்பானவனே
 எனக்கும் என்னமோ மனசுக்குள் ஏக்கம் தயக்கம் தாக்கம் யாரிடமும் பெற முடியா அறுதல் உன்னிடம் கிடைப்பதாக நம்புகின்றேன்
விடியலும் வெளிப்புமாகிய எம் அன்பால் நம் காயங்களிற்கு மருந்திட தவிக்கின்றோம் உன்னை நான் புரிநது கொள்வதைப்போலவே என்னை நீயும் புரிகின்றாய் உன் சொற்கள் என்னை ஆறுதல் படுத்துகிறது உன்நோய் எனை சித்திரவதை செய்கிறது

 உ்னை பார்க்கனும் போல ஏதோ வெறுனமவிரிப்புகளை தொலைத்து உன்னுடன இருக்கனும் போல .......கிடைக்கும் நேரத்தில் எல்லரம் இனி பிரிவே வேண்டாம் என பிராத்தனை செய்கின்றேன் இரக்கமில்லாத காலம் .அதை இன்னும் தரவில்லை

Thursday, 4 July 2013

வலி தேடும் ஒளிகள் கவிதை





வலி தேடும் ஒளிகள்

எ(ம)னக்கானவனே

நியமாக உனை
தழுவ முடியவில்லை
எ(ம்) நிழலாக -நீ
விட்டுச் சென்ற நினைவுகள்
நெஞ்சக் கூண்டை
பலமாய் அழுத்துகின்றது

முன் சென்ற நாட்களில்-உனை
பாடிய தெருக்கள்
கூண்டிலிட்ட கிளியாகி
வாயடைத்து கிடக்கின்றது

வாழ்திய மலா்கள்-இப்போ
முதிர்ந்த கனவுடன்
உதிர்ந்து கிடக்கிறது -உனை
தாங்கிய ஊர்திகள்
எலும்புக் கூடாய்...

நீ-எம்முடன்
வாழ்ந்த வீட்டில்
நெருஞ்சி முட்கள்
புரையோடி அரவங்கள்
ஆழ்கிறது

உன் சவக்குழிகளை
மண்டியிட்ட கைகள்
மனதோடு அழுகிறது

கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை-நீயோ
நியாத்திற்கு உரமிட்டு
எங்கோ மறைந்து போகிறாய்

நட்சத்திரங்களில் பாடல்
இசைக்கின்றாய்
ஆழக் கடலில்
நடனமிடுகின்றாய்

ஈரக் காற்றுடன்
எனக்கு மட்டும் கேட்கும் -
உன் பாடலை
யாரிடமும் பகிர்ந்திட முடியாது
இதயக் குடுவையில்
அடைத்து கொள்கின்றேன்

என் உயிருக்கு இன்னும்
பிச்சை கேட்டுக்கொள்வதால்...........................

Sunday, 30 June 2013

தூரத்துத் தெருநாய்கள் கவிதை

தூரத்துதெருநாய்கள்

செப்பணிடப்பட்ட 
செம்மண் வீதியெங்கும் -தூரத்து
தெரு நாய்கள் 

குட்டை வாலை மறைத்து -நீண்ட
சட்டை போட்டு
கறுப்பும் சிவப்புமாய்...........

நிறமற்றுப் போன
எம்மூா் தெருக்கள்-எல்லாம்
விசிறப்பட்டன
பொதியிடப்பட்டமாமிசங்கள்


சிவப்பருசி வடித்த கஞ்சியை
பார்த்து பார்த்து
பசிமறந்திட
வேலிக் கதிகாலின்
சீமைக் கிளுவையின்
ஒரு துளி நிழலில்
காவல் செய்தது

இன்னும் விடியவில்லை- என்று
இரகசியமாய் கூவிற்று
இறக்கை பிடுங்கப்பட்ட குயில் பேடு -ஒன்று

எம் மௌனங்களை
உடைக்க சொல்கிறாய் அது
உனக்காக உடைவதாய் இல்லை -என
மண்பிரன்டி
துடிப்படங்கிப் போனது
ஊர்மனை நாய்கள்

தெருநாய்கள் அலட்டிக் கொண்டது


இது தான் தம் வீரமென்று.............................

Sunday, 23 June 2013

நினைவுத் தூறல்..


குட்டிச் செல்வங்களே-உம்
நினைவு வலிக்கிறது
அள்ளி அணைத்து-முத்தமிட
என் நெஞ்சு துடிக்கிறது

உலா வரும் நிலாவினை
உவகையுடன் காட்டி
குலாவியே உணவை தந்து
குதுகலிக்க நான் -இல்லை
நீள்தொலைவில்
வெண்பனிப் போர்வையுடன்..........

.எங்கோ ஒா் மூலையில்
தூக்கணங் குருவிக்கூட்டின்
தும்புகளில் நான்..............

பாதியிரவில் உம்
தூக்கத்தை குழப்பி
பார்த்து விட்டு
அவசரமாய் ஓடுகின்றேன்
மிகுதி வேலைக்காய்.....

பிஞ்சுப் பிரபஞ்சங்களாய்-தினம்
என்னையே சுற்றிவரும்
அன்புக்குழந்தைகளே-உங்களை
ஆரத்தழுவுகின்றேன்

காலத்தடுமாற்றம் நாம்
வாழ்ந்த நிலை என்ன
வாழும் நிலை என்ன
வலிக்கிறது உள்ளம்

ஆசைச் செல்வங்களே
ஆழ வேண்டாம்
பாச நெஞ்சத்துடன்
பாக்குவமாய் இருங்கள்

நாளை நாம்
ஒன்றாவோம்
மலரின் மலர்ச்சிக்காய்
புன்னகைப்போம்..............மிதயா  கானவி...

இறந்துபோனநாளொன்று............


படித்ததில்பிடித்த-உன்

வரிகள்உன்னைப்
படித்தபின்
அடங்கி போயிற்று
இராப்பறவையின்
அவலக்குரலாய்

எனை
இனம்காணத்தவறிய
உன்விழிகள்
எமக்கான
உறவின்விரிசல்களை
மௌனங்களாக்கின

வெற்றுவார்த்தைகளின்
சத்தமற்றஒலிகள்
சலசலக்கும்ஓடைகளின்
ஓரங்களில்
செத்தபாசிச்செடிகளாய்
நாறும்கழிவுகளாய்
இறந்தநாளொன்றின்
முடிவில்கரையொதுங்குகின

உனைதொலைத்து
விட
திராணியற்று
என்னுள்கரைகிறது
நீண்டுதொங்கும்
இரவுகளின்வெம்மை
நெஞ்சுமையத்தில்
வெறுமையாய்............

தேய்ந்துகொண்டிருந்த
நினைவுகளை
தூசுதட்டி
மீளவும்
துடைத்துப்பார்க்கின்றேன்
நீயில்லாமல்போன
என்னைபோலவே
அதுவும்.........

நிகழ்தகவுகளே
நிகழ்வுகள்ஆனதால்
உண்மைகளைநியாயப்படுத்த
முடியாதவளாகி-உன்
பார்வைகளைதற்செயலாக்கி
நகரும்நாட்கள்
சொல்லிசெல்லும்
இறந்துபோன
நாளொன்றின்இயலாமைகளை...

...........மிதயா  கானவி....................

எமக்காக ஒரு விடியல் வரும்...

என் இரவை நிறைக்கிறது
உன் கனவுகள்
என்னை சுற்றி காற்றில் அலைகிறது
உன் காதலின் செய்தி
உன் பாடலின் இசையாய் வழிகிறேன்
உன் சொற்களில் என்னை நிரப்பியிருக்கிறாய்
அந்த அன்பின் வார்த்தைகள்
என்னை அள்ளிப்போகிறது
ஆயினும் அன்பே............................

தனிமை கொடியது
என்னையும் உன்னையும்
நம் வாழ்வையும்
சுட்டெரித்து விடும்

ஒரு விடியலில்
நான் உன்னிடம்
வருவேன்

காரிருளில் உன்
மடி மீது முகம்புதைக்க
கவலை மறந்து
உன் மார்வில்
சாய்ந்து கொள்ள
யாரும் கண்டறியா
உன் அன்பில் இணைந்திட
நான் வருவேன்
உன்னிடம்


---------- மிதாயா கானவி

Saturday, 22 June 2013

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

Tuesday, 11 June 2013

கானவியின் கருணை நதி.....
..............................................

காகித மூலை மடித்து கதையை காத்திருக்க வைக்காமல்
இருந்த இருப்பில் அருகில் நடப்பது ஏதும் அறியாமல்
படித்து முடித்தேன் கானவியின் கருணை நதி.

கதை படித்தாயிற்று நெஞ்சில் கனம் அதிகமாயிற்று
எம் மக்கள் பட்ட அவலங்கள், எம்மவரின் அர்ப்பணிப்புக்கள்,
வேண்டிய தெய்வங்கள் மக்களைக் கைவிட்ட போதும்
இயன்றவரை உயிர்களை காப்பாற்றிய இறைவனுக்கும்
மேலான மருத்துவ பணியாளர்களின் கருணைப்பணி நிறைந்
தோடுவதோடு புனிதக் காதல் ஒன்றின் தேடலும் தாகமும்
கலந்தோடி கடல் சேர்கின்றது கருணை நதி

இளம் எழுத்தாளரின் இரண்டாவது நுால் என்பதனாலோ
என்னவோ நதியின் வளைவுகள் குறைந்திருந்தாலும்
மனதில் பலதை பயிரிட்டு சென்றுள்ளது. உண்மையில்
கானவி சிறந்த சிந்தனை உள்ள துணிந்த பெண்.

இறுதிக்கட்ட போரில் எஞ்சிய எம் மக்கள் ஒவ்வொருவரின்
மனங்களிலும் அழியாப் பதிவாய் இருக்கும் துயர் நிறைந்த
அவலங்களை எளிய நடையில் புரிய வைத்திருக்கிறார்
கானவி. நானும் அவ்விடம் தான் ஆனாலும் இறுதிக்கட்ட
போரின் சூழலில் அங்கு வாழவில்லை.
அன்று அங்கு நடந்த கோர சம்பவங்களை ஊடகங்கள்
மூலமாக அல்ல எம் உறவுகளிடம் கேட்டு கேட்டு
துயர் பகிர்ந்த எனக்கு கானவி சொல்லும் கருணை
நதி மேலும் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக படிக்க வேண்டிய
நாவல் " கருணை நதி". கானவியின் இந்த இலக்கிய
பயணம் தொடர மேன்மேலும் வளர என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்....
நன்றி

அன்புடன்...
திசா.ஞானசந்திரன்

Monday, 10 June 2013

பிணக்காட்டின் இறுதி நாள்
...............................................

வானம் கந்தக புகைகளால்
வன்புணரப்பட்டு புவியெங்கும்
தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்த
விடிகாலைப் பொழுதொன்று
சாவின் முனகலையும் இழந்து
சத்தங்களை குறைத்து
சவமாய்க் கிடந்தது

சடங்குள் சம்பிரதாயங்கள்
அந்தரங்கங்கள் பிடிமானங்கள்
துணிச்சல்கள் எதுவுமற்று
மௌனமாகி முன்செல்லும்
பிசாசுகளின் பின்னால்
நடக்கத் தொடங்கினோம்

குழந்தைகளையும்
முட்களையும் ஒன்றாக்கி
வரிசைப்படுத்தியது
பிசாசுக் குட்டிகள்

ஈனக்குரல் எடுத்து
கதறும் ஓசை காற்றில்
ஏறித் தேவதைகளின்
வாசல் வரை சென்றது...

வான் இறங்கி வரவே இல்லை
எந்த தேவதைகளும்...

எம் தெருக்களில்
கற்களும் முட்களும்
அடங்கிப்போக
பிணங்களும்
சதைத்துண்டங்களும்
இடையுறாகியது கால்
வழியில்..

பெரும் வெடி ஓசை
அடங்கி சன்னங்கள்
மட்டும் சடசடக்க
வீதி வீதியாய்
முனங்கல்கள் கேட்டன

முல்லை--வாய்க்காலில்
நிறைந்த குருதியும்
வட்டு வாகலில் மிதந்த
பிணங்களும்..........................

ஒருதுளி தண்ணீருக்காய்
வெம்பிய உயிர்கள்
தேடுவார் அற்று
உருக்குலைந்து போனது

இத்தனை காலம்
ஓடிமறைந்தாலும்
வற்றாது நெஞ்சில்
நஞ்சாய் எரிகிறது

உயிருக்காய்
ஊசலாடிக் கொண்டிருந்த
அன்றைய நாளை
பிசாசுக்களின் வாரிசுக்கள்
சாத்தான்னளின் திருமண
நாளாக்கி இரத்த விருந்து
உபசரித்துக் கொண்டது..

.
மிதயா.கானவி)

Wednesday, 6 March 2013

கனவுகளின் காலபோகம்.............கவிதை


காலபோகக் கனவுகளின்
வெகுமதியை -மழை
பறித்துச் சென்று
நீண்ட நேரமாகியிருந்தது.
கனவுகளை திண்ட
ஏமாப்பில்-
கோழிவிழுங்கிய
கருநாகம் போல்
அசைவற்று கிடந்தது
வானம்

ஊர்ப் பெண்டுகளின்
மாரடிர்பை போல் 
விசிறியடித்தது
காற்று

தலைப்பிரசவத்திற்காய்
காத்திருந்த
நாள்லொன்றில்
தாய்மடி தொடாது
இறந்து போன
குழநதையின் தாய்போல
அலங்கோலமாய்
கிடந்தது
வயல்
ஆறுதல் தரமுடியா
 துனைவனாய்
தேம்பியயேயழுதது.....நிலம்


வீட்டின் கூரையில்
எங்கோ ஓர் மூலையில்
தொங்கும் ஒட்டறைபோல்
காத்து கிடக்கிறது
ஏழைவிவசாயின்
காலபோகக்
கனவுகள்

Friday, 1 March 2013

இதயத்யதுடிப்பு................கவிதை


தேனீர் கோப்பைகள்
வெறுமையாகியும்
சற்றும் பிசுபிசுப்பின்றி
வரண்டு கிடந்தது
தொண்டை

மீள்குடியேற்றப்படாத
என் சிறுதேசம் போல
சிதைந்த உணர்வுகளை
வலிந்திழுத்து ஒன்று சேர்த்து
அவள் இதயத்துடிப்பை
மீண்டும்
பரிசோதிக்க எத்தனித்தேன்
தோற்றுக் கொண்டது
என் பட்டப்படிப்புகள்
 ரெலஸ்கோப்பினுள்
வலி வலியென துடித்துகொண்டது
அவள் இதயம்

குழம்பிய குட்டையாய்
தளம்பிய உணர்வுடன்
நீண்ட பெருமூச்சொன்று

நிமிர்ந்து பார்த்தேன்
மலா்ந்து உதிர்ந்த
மார்பவங்கள்
சட்டை கிழிசலால்
எட்டிப்பார்க்க
வெற்றிலை சப்பல்
கொடுக்கினுள் தடம்புரள
பொக்கை வாய்நிறைய
புன்னகையை
சமைத்துக்கொண்டிருந்தாள்
;நம்பிக்கையுடன்
பகலோனின் கீற்றுக்கள்
தகரக்கொடடில்களின்
கொடுரத்தை சப்பிதுப்பிவிட
தூரத்து
வேப்பமரக்காக்கா
உதிரும் சருகுகளில்
வெட்பம் தணித்து
இடைவிடாது கத்தியது

Sunday, 24 February 2013

தனிமை வரைதமடல்...................3

ஹாய் டா நலமா?
நான் அனுப்பிய இருமடலும் உன் கரம் சோ்திருக்க நியாயமில்லை தொலைதூரப்புள்ளியான உன் உறக்கம் கூட இரக்கமில்லா கனவுகளால்தினம் தினம் கிளித்தெறியப்படுவதை நான் அறிவேன்.............,இரவு இங்கு குளிரில் நனைந்து அமைதியாகிக் கிடக்கின்றது.கனத்த சூடான பெருமூச்சு நாளை விடியுமா?என்று தொண்டையை வரட்டிநிற்கிறது.கறல்பிடித்த கம்பி தாண்டும் காயப்பட்டு சீழ் பிடித்த காற்றை சுவாசிதபடிஎங்கோ ஒா்மூலையில் கால்கள் கடுக்க கைகள்விலங்கிடப்பட்டு தவித்துகொள்வாய்.......... ஒரு சில வருடங்களிற்கு முன் இராப்பாடிப்பறவைகளின் சிறகுகள் போல்அசைக்கவும் சிரிக்கவும்செய்த உன் விழிகள் இப்போ கதிரவன்முத்தமிட அல்லி மலர்போல ஒளிமங்கி நிறமிழந்து இருக்கிறதா?எப்போதும் பிடிக்காத அந்த சிகரெட்டிலிருந்து சுருள்சுருளாக வரும்புகை உன் சின்ன தடிமூக்கை தாண்டியும் உன் நரம்புகளை ஸ்திரமடைய வைக்கிறதா?கண்ணீா் மற கவலைவிடு ...........தடுப்பு காவல் தமிழா்க்கொரு பாடமடா?முகம் கான ஆசை தொலைதூரம் இருக்கிறாய் .......சிறகின்றி பறக்கின்றேன் உன் அருகிருந்து சிரிக்கின்றேன்

Friday, 22 February 2013

கனவு ..............கவிதை

கனவு

இரவின் இருளில்
ஒளித்து வாழும்
திருடன்
கனவு

Saturday, 16 February 2013

அன்புள்ள அப்பா.............கவிதை

  அன்புள்ள ..............
அப்பா
உன்
நீண்ட பயணத்தின் பின்


...
மழழைப்பருவத்தில்
உனக்காக நான்சேர்த்த
முத்தங்கள் எல்லாம்
உனை தொட்டிட
துடிக்கிறது

மனச்சிறையுடைத்து
துள்ளிப்பாய்ந்த ஆசை
முத்தங்கள்
கணனித்திரையுடன்
முட்டிமோதி

மீண்டும்
வலிபட்டு
துடிக்கிறது
உன் வருகைக்காய்.................................................

Monday, 4 February 2013

தனிமை வரைந்த மடல் 2









என்னவனே......................
வெளியில் செமமழைகொட்டிக்கொண்டிருக்கிறது.மழைக்கீற்றுக்களின் ஆரோகனஅவரோகன தாளட்டுகளில் ஊா்அமைதியாகவே உறங்கிக்கொண்டிருந்தது.  புயலில் சிக்கிய இலையுதிர்காலத்து இலைகளைப்போல மனம்அலைந்து கொண்டிருந்தது.

இருளுக்கும் எம் உறவுக்கும் நிறையவே ஒப்பந்தங்கள் உன் விடியலை பறித்துக்கொள்வதும் என்துாக்கத்தை தொலைத்துவிடுவதும் இருளின்வழக்கமாகிவிட்டது இருந்தும்அலை சொல்லும் கதையை கரைகேட்பதுபோல் என் உணா்வுகளுடன் பயணிக்க இரவின் அமைதியால் தான் முடிகிறது
.பகல் பொழுதை கொள்ளையடித்துக்கொணடிருக்கும் சூரியனால் பைத்தியக்காறியெண்ட பட்டம் தான் தந்திடமுடியும். பளசுகளை மறக்கத்தான் நினைக்றன் முடியல்ல............ உன் கன்னுறாவி கோலம் கண்ணுக்க வந்துநிக்குதடா காற்றுக்கூட  ஆதரவுதரமறுக்க நீ  எதும்பேசவில்லை மௌனமாய் புன்னகைத்தாய்.............. ..மரணத்தைகாட்டிலும் மௌனம் கொடுமையானது .சீக்கிரமே புரிந்துவிட்டன் இதயத்தின் ஆழத்தில் உரக்க எதிரொளித்தது தெளிவாகவும்  அழுத்தமாகவும் இன்றைக்கம் நிலைத்துள்ளது.  நீா் நிறைந்து குழமாகிய ஈரவிழிகளுடன் நீ  கையசைத்தாய்................துயரம் எங்கள் உயிர்களை இனைத்தது கண்ணீரால் கழுவித்துாய்மையாக்கப்பட்ட காதல் காலம் கடந்தும் என்றும் அழகாகவே காத்திருக்கும் .......................

Sunday, 3 February 2013

தனிமை வரைந்த மடல்

என் அன்பானவனே....................
நான் ஒரளவு நலம் நீ எப்படியுள்ளாய்? உன்னை பார்க்க என் கண்கள் இதயத்தவைிட வேகமாக துடிக்குதடா.......

மொட்ட வானில வட்டவடிவாக தெரியும் நிலாவைப்பாக்கேக்க நீ சிரித்துக்கிட்டு இருப்பது போல் ஒர் பிரமை ஆனால்முடியல்ல
உன் வட்டவடிவான முகத்தில் விடியாதரேகைகள் புடைத்துதொங்க சடையான தாடியுடன் பலவீனமாய் வெளுத்துப்போய் கண்கள் குழிவிழுந்து வேதனை குடியிருக்க இருண்டபள்ளத்தாக்கைபோல் விம்மி தவித்து மௌனமாகவே விடைதந்தது தான் அடிக்கடி மனதை  காயப்படுத்தி செல்லுதடா. சிறகடியொசைபோல...................தொடந்துவரைய முடியல்ல மன்னித்து விடு நாளை அனுப்புவேன்..................

Friday, 1 February 2013

காயாத கண்ணீர் .................சிறுகதை

காயாத கண்ணீர்

பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்தஉபகரணங்களையும் இழந்து வன்னிப்போரின்இறுதிநாட்களிலும் இயங்கிக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனை அது.அங்கு மண்போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.
ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ.
மருந்துகளோ இருக்கவில்லை பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்;டி குடிபுகுந்து வாழ்வதைப்போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது.

                                   மருத்துவமனையின் அமைதி காணாமல்போயிருந்தது. மக்களின் அலறல் ஒலிகள் காதைப்பிய்த்துக்கொண்டிருதன.
அந்த சோகத்தணல் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது. அப்போது மருத்துவ உதவியாளர் நிலா சத்திர சிகிச்சை அறையைவிட்டு வெளியில் வந்தாள்.தறப்பாளினால் போடப்பட்டும்,சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டும் கிடந்த அனுமதிக்கும் விடுதியில் நடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் தெரிய போடப்பட்டிருந்தாள்;.காயமடைந்த பலரையும்தாண்டி அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறுஅங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலையும் தாண்டி அம்மாவின் அருகில் சென்றாள். இறந்தவர்களின் உடலைக்கூட அகற்றமுடியாத சூழல்.வெடியோசைகள் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன.யாரின் உயிரிற்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.
                                            காயமடைந்திருந்த அம்மா 'என்ர பிள்ளை பிள்ளை'என்றே முனகிக்கொண்டிருந்தாள். குருதி அதிகளவு வெளியேறி உடம்பு கண்டி சிவந்திருந்தது.கை கால் குளிர்ந்து நடுங்கியது.மார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும்இஉட்பாவாடையும் அணிந்திருந்தாள்.கைகளில் மட்டும் ஒரு சிறிய பையனின் படம் வைத்து இறுகப்பற்றியிருந்தாள்.அதை நிலாவிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள். முடியவில்லை. ஊடல் பலன் இழந்திருந்தது. ஏவ்வளவோ கத்த முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவில்லை.நிலா அந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானாள்.மூன்று சேலைன்களை வென்புளோன் ஊசியுடாக வேகமாக ஏற்றினாள்.மெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர் பெறத் தொடங்கினாள். ஊசி மருந்துகளையும் ஏற்றினாள்.பதிந்த மாமரக்கொப்பொன்றில் சேலைன் ஒன்றைக்கட்டிவிட்டு மெதுவாக போகவிட்டாள். முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தென்பு வர 'தங்கச்சி என்ர மூன்று வயதுப்பிள்ளையைக்காணவில்;லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்'அம்மா பல முறை கூறினாள். ஆனாலும் அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும்இருக்கவில்லை.காரணம் எல்லோருமே அந்த நிலையை அடைந்திருந்த படியாலேயே ஆகும். ஏல்லா இடங்களிலும் இதே ஓலம்தான்.
                  அம்மாவை சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டுசெல்ல முனைந்த போது அம்மா வரமறுத்தாள். ஏன்ர பிள்ளை வந்தால்தான் நான்வருவேன் என்று அம்மா கெஞ்சினாள். படார் என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகைமண்டலமாகியது.நிலாவும் கண்களை மூடிக்கொண்டு விழுந்தெழுந்தாள்.அம்மாவின் சேலைன் போத்தலில் இருந்த சேலைனும் நிலத்தில் ஊற்றியது.நிமிர்ந்து பார்த்தபோதுதான்  தெரிந்தது சேலைன் போத்தலும் காயப்பட்டிருந்தது.
                                     ஒரு சிறிது நேர அமைதியின் பின் மீண்டும் மருத்துவமனையில் ஆரவாரம் மரண ஓலங்கள் தொடர்ந்தன.;அய்யா அய்யா அது என்ன அநியாயம் ஓர் பெண் விகாரமாய் தலையிலே கைகளை வைத்தபடி அழுதாள். ஆவள் அருகில் தலை சிதைந்த நிலையில் ஓர் பெண்ணின் சடலம். இன்னொருவர் இறந்துபோன தன் பச்சிளம் பாலகனை மடியில் வைத்து கதறினார். இன்னும் சிலர் சடலங்களிற்கும் காயப்பட்டவர்களிற்கும் இடையில் தமது உறவுகளை பால் தேடி        திருக்காது அம்மாவைத் தூக்கினார்கள்.அம்மாவிற்கு குடலில் ஈரலில் சிறுநீரகத்தில் பாரிய காயங்கள் இருந்தமையால் சத்திர சிகிச்சையின் பின் அவசர சிகிச்சைவிடுதிக்கு அனுப்பப்பட்டாள்.
                             நள்ளிரவைத்தாண்டியும் சிறிய சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.இ.ரவைப் பகலாக்கி உறக்கத்தைதொலைத்து உணவுகூட இன்றிஅ ங்கு நின்ற மருத்துவ ஊழியர்கள் மனிதநேயத்துடன்  தங்களால் இயன்ற வரை உழைத்ததை யாராலும் மறுக்க முடியாதுதான்.அவசர சிகிச்சை விடுதியில் தலைக்காயம் வயிற்றுக்காயம் நெஞ்சுக்காயம் என்று கடடில்களின் எண்ணிக்கையையும் தாண்டி நிலத்திலும் வரிசைப்படுத்தப் பட்டிருந்தார்கள்.மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கு அனுப்புவதற்கான கப்பலும் நீண்ட நாட்களாக வராமையால் நோயாளர்களை பராமரிப்பதில் மருத்துவமனை ஊழியர்கள் கடும் சிரமப்பட்டார்கள். எல்லோரிற்கும் சேலைன் ஏறிக்கொண்டிருந்தது. பலருக்கு இரத்தமும் ஏற்றப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் மேவி எந்தநிமிடம அலையும் பசுக்கன்று போல் அந்தரித்துத்திரிந்தார்கள்.
ஆனால் அம்மா இன்னும் ஒப்பிறேசனுக்கு சம்மதிக்கவில்லை.நிலாவிற்கு திடீரென வந்த செய்தி தலைவிறைக்கவைத்ததோடு உலகமே இருண்டு போனது போல உணர்ந்தாள்.அவள் கண்கள் கண்ணீரில் மிதந்தது.தன்னுடன் மருத்துவப்பணி புரிந்து கொண்டிருந்த அவள் உயிர்த்தோழி காயமடைந்து இறந்து விட்டதை மருத்துவமனையில் பேசிக்கொண்டார்கள். ஆந்த நேரத்தில் ஏற்பட்ட சோக உணர்வு இனிமேல் ஓர் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குமனம் சின்னாபின்னமாகியிருந்தது.
                            வேதனை கோபம் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீரை துடைத்து;கொண்டு மீண்டும் தன்கடமைக்குத்தயாரானாள். ஏன்ன நினைத்தாளோ தெரியவில்லை அம்மாவிடம் சென்று உங்கள் பிள்ளையின் பெயரைச் ;சொல்லுங்கள் மனிதநேய உதவிசெய்யும் குழுக்களிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேடித்தருவார்கள் என்று சற்று கடுப்பான குரலில் கூறினாள்.அம்மா சொன்னா 'நான் காயத்தோடையும் பிள்ளையைத்தேடித்திரிஞ்சன். மயங்கினாப்பிறகுதான்ஆரோ இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கினம';. 'சரி அம்மா நீங்க உயிரோட இருக்க உடனடி ஒப்பிரேசன் தேவை' என்று அம்மாவின் முடிவுக்காய் காத்; என்ன நடக்குமோ என்ற பரபரப்பு எல்லோர் மனங்களிலும் திகிலூட்டிக்கொண்டிருந்தது.                           
                           இரவோடு இரவாக வந்த செய்தியால் கும்இருட்டிலும் நிலாவின் மனம் வெளித்தது.கொடூரமான அந்த வேளையிருலும் அவர்களிற்கு அந்தச்செய்தி தேனாய் இனித்தது.நிலாவின் சக தோழன் ஒருவன் 'நாளைக்கு ஐ.சி.ஆர்.சி. யின் கப்பல் வருகுதாம்.'என்று பெரிதாக  சொல்லியபடி வந்தான். ஏத்தனையோ நாட்களாக நோயாளரை ஏற்ற வருவதாக சொல்லி இலகு காத்த  கிளி போல ஏமாந்த நாட்களைப்போல்தான் 'நாளை வருமோ' என்று நிலா பதிலுக்கு வினாவினாள். மருத்துவமனையில் கூட காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதே மீண்டும் காயமடைந்து இறந்த பரிதாப நிலை எத்தனை அவள் முன்னே நடந்தேறியது. அதைவிட மருந்துகளும் முடிவடைந்திரு;தன.அப்போது சிறு ரோச் வெளிச்சத்துடன் வந்த அவ் மருத்துவமனை வைத்தியர் நிலாவிடம் 'ஐந்நூறு பேரை மட்டும்தான் அனுப்பலாம் அதற்கு ஏற்றவாறு முக்கியமானவர்களை தெரிவு செய்வோம்' என்று நோயாளர்களின் ரி;க்கற்றுகளைப்பார்வையிட்டு உறுதி செய்தார்.
                     நேரம் அதிகாலை மூன்று மணி மக்கள் சந்தோசமாக வாழ்ந்த அழகிய கிராமத்தில் தான் அந்த மருத்துவமனையிரு;தது.ஆனாலும் விடியலைகூற சேவல்கள் இருக்கவில்லை.மாறாக வெடியோசைகள்தான் நித்திய பூசையாக முழங்கியது
                      கப்பல் வருகின்றது என்ற செய்தி பரவலடைய நான் முந்தி நீ முந்தி என்று அனுமதியைப்பெறுவதற்கு முண்டியடித்தார்கள்.ஆனாலும் மூன்றுமாத கால இடைவெளியில் வரும் கப்பலில் அவசர நோயாளர்களைஅனுப்புவதற்கே இடம் போதவில்லை மற்றவர்களை எவ்வாறு............                                                                                                 
 சிவப்பு பேனாவால் அடையாளப்படுத்தி வைத்திருந்த அந்த அம்மாவின் ரிக்கற்றை வைத்தியரிடம் கொடுத்த நிலா பதிலுக்கு காத்திராமல் “அம்மா வயிற்றின் உள்ளுறுப்புக்களில் பாரிய காயம் கட்டாயம் லேதிக சிசிச்சைக்காக கப்பலில் போக வேண்டும்' ”என்றவளை முறைத்துப்பார்த்த அம்மா இயலாத காயத்துடனும் கட்டிலை விட்டு எழுந்து 'னச என்ர பிள்ளை இல்லாம நான் போகமாட்டன் செத்தா பரவாயில்லை'என்றாள் திடமாக. நிலாவிற்கு அம்மாவின் முகத்தைப்பார்க்க உள்ளம் நடுங்கியது.பட்டென நெஞ்சில் வலித்தது.ஏனெனில் நிலாவும் தனது இரண்டு பிள்ளைகளைப்பிரிந்து நெடுநாளாகிவிட்டது. ஏன்ன செய்வார்களோ? எப்படி இருப்பார்களோ? அவர்களைப்பற்றியோசிக்கும் நிலை நிலாவிற்கு இருக்கவில்லை. ஓய்வின்றிய தொடர் வேலைகள் நாளுக்குநாள் அவள் கண் முன்னே நடக்கும் கொடூர சாவுகள் எல்லாவற்றிலும் அவள் சலித்துப்போய்விட்டாள்.தன் பிள்ளைகள் உயிருடன் எங்கோ இருப்பார்கள் மீண்டும் எனக்கொரு பிறப்பிருந்தால் அவர்களுடன் வாழவிடு ஆண்டவனே என்றுதான் மனதுக்குள் வேண்டுவாள். இந்தப்பிறப்பில் ஆண்டவனால் கூட தன்னை காப்பாற்ற முடியாது என்ற பிரமை அவள் மனதில் பதிந்திருந்தது.
                                 பக்கத்தில் இருந்த நோயாளி வைத்தியரின் காலைப்பிடித்து '”என்பிள்ளைக்கு இரண்டு காலிலும் முறிவு அந்த அம்மாவின் இடத்திற்கு என்னை அனுப்புங்கோ'“ என கெஞ்சவும் பட்டென கடந்த நினைவிலிருந்து தன் நினைவுக்கு வந்தாள் நிலா..உண்மையிலேயே அந்த நோயாளிக்கும் மேலதிக சிகிச்சை தேவைதான். அதைவிட உயிருக்காக போராடும் பலர் இருக்கிறார்கள்.அவர்களிற்கே கப்பலில் இடம் போதாமல் இருந்தமையால் அவர்கள் மனங்களைக்கல்லாக்கி ஆறுதலகூட கூற காலமின்றிஅவர்களைக்கடந்து அடுத்த நோயாளியைப்பார்க்க சென்றார்கள். மருத்துவர்களின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலமது.
                          ஏறிகணைகள் சன்னங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன.அதற்கு பயந்து பயந்து, பதிந்து, நிமிர்ந்து படுத்த நாட்களெல்லாம் கழித்து இறுதிநாட்களில் விதியிருந்தால் நடக்கும் என்று அந்த சூழலில் இருந்த பெரும்பாலானவர்களின் மனங்களில் பதிந்திருந்த உண்மையாகியது. நேரம் காலை ஒன்பது ஆகியது.மருத்துவமனை மேலும் பரபரப்பானது. முள்ளிவாய்க்hல் மருத்துவமனையிருந்த இடத்திலிருந்து அம்புலன்ஸ் வண்டியில் கடற்கரைவரை நோயாளர்களை ஏற்றச்சென்று சிறிய படகு ஒன்றில் i.cr.cயின் பெரிய கப்பலில் ஏற்றினார்கள்.இதற்குள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய நோயாளர்கள் படும்வேதனை சொல்லமுடியாது.முதலில் படுக்கையாளர்களை ஏற்றினார்கள்.
                                அம்மாவால் நிலாவிற்கு பெரிய தலையிடியாக இருந்தது.இருந்த இடத்தை விட்டு கப்பலுக்குப்போக மறுத்தாள்.எவ்வளவு சொல்லியும் அளவற்ற பிள்ளைப்பாசம் முழுஇதயம் பூராவும் இருந்தமையால்அவளுக்கு வேறொன்றயும் சிந்திக்க முடியவில்லை.பிள்ளை வர வேணும் அது மடடும் தான் சொல்லுவாள். பல சிரமத்தின் மத்தியிலும் எட்டு பைன்ற் குருதி ஏற்றித்தான் அவள் உயிரைக்காப்பாற்றி வைத்திருந்தார்கள்.போக மறுத்தால்; மேலதிக சிகிச்சையின்றி சில நாட்களில் இறந்து போவாள் என்பதை நினைக்க நிலாவிற்கு சங்கடமாய் இருந்தது. '"அம்மா நீங்கள் போகாவிடடால் உங்கள் உயிரை இனி எங்களால் காப்பாற்ற முடியாது போய்விடும். மருந்தில்லை. போடுவதற்கு சேலைன் இல்லை. நீங்கள் பிள்ளையுடன் உயிருடன் வாழ வேண்டுமென்றால் கட்டாயம் போகவேண்டும் இதைவிட எங்களால் ஒன்றும் சொல்லமுடியாது'" என்று கடுப்பான தொனியில் கூறினாள்.அம்மாவின் நிலமை நெஞ்சைப்பிழந்தாலும்  அவர்களாலும் என்ன செய்ய முடியும்.மீண்டும் 'அம்மா பிள்ளை வந்தால் கட்டாயம் அடுத்த கப்பலில் அனுப்புவம்............'
                             அம்மாவும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. நிலாவை அருகில் அமர்த்தி கைகளை இறுகப்பற்றிக்கொண்டு ''என் கணவர் பிள்ளைக்கு பத்து மாதத்தில் இறந்திட்டார்.எனக்கு என்ர சொந்தம் அவன்தான் அவன் இல்லாட்டி என்ர உயிர் தேவையில்லை. அவனை என்னிடம் அனுப்புங்கோ'என்று நிலாவின் கைகளைக் கண்ணில் ஒற்றினாள்". தன்னிடம் உள்ள ஒரேஒரு சொத்து பிள்ளையின் படம் என நீட்டினாள்.
               நிலா நாளை நானும் இறக்கலாம் என்ற எண்ணத்துடன் மறுப்பாக தலையசைத்து '"அம்மா இதனை கொண்டு போங்கோ பெயரைத்தாங்கோ'" என்று எழுதினாள.; அம்மா போக சம்மதித்தது சிறிது சந்தோசமாக இருந்தது. அம்மாவிற்கு போட்டு அனுப்புவதற்கு ஓர் உடுப்பு கூட இருக்கவில்லை. ஓர் சிறிய பெட்சீற்துண்டால் தான் மூடியிருந்தாள். நிலாவிற்கு கண்கள் மரத்துவிட்டன. இப்போது அழுகை கூட வருவதில்லை எத்தனை சோகங்களை நேரில் பார்த்து சுமக்கிறாள் அவள். 'கெதியண்டு அனுப்புங்கோ நேரம் போகுது' நோயாளரை தூக்கும் உதவியாளர்கள் அவசரப்படுத்தினார்கள்.கையிலிருந்த மருத்துவமனை உடுப்புக்களும் முடிந்து போய்விட்டது.பெண்ணின் மானத்தைக்காத்து எப்படி அனுப்புவது என்று தெரியாது தவித்தாள்.அம்மாவின் வயிறு பெருத்து வீங்கியிருந்தது இறுக்கமான உடுப்பு போடமுடியாது.யாரிடமும் உதவி கேட்க முடியாது. ஏல்லோருக்கும் அதேநிலைதான்.
                         வேகமாக சத்திர சிகிச்சைக்கூடத்தினுள் நுளைந்தவள் அங்கு  போட வைத்திருந்த(சத்திரசிகிட்சைசெய்யும் போது மாற்றும்) கவுணை எடுத்து ஓடி வந்தாள். வேகமாக அம்மாவிற்கு போட்டு அனுப்பினாள்.சரி பிழைக்கு அப்பால் அம்மாவிற்கு உடுப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ந்தாள். 'பிள்ளையள் என்ர பிள்ளையை எப்படியும் அனுப்புங்கோ' என வழிக்குவழி சொல்லி போனாள். நிலாவிற்குதூக்கி வாரிப்போட்டது. நிலா அங்கு நின்ற நாள்வரை அப்படியொரு பிள்ளை கிடைக்கவேயில்லை.பொன்னுச்சாமி உசாந் உயிருடன் இருப்பானா? யாராவது அறிந்தீர்களா?
                 
  இன்று நிலாவும் காலச்சக்கரத்தின் கடுகதி வேகத்தால் யாரும் கனவிலும் நினைக்காத ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடிந்து முகாமினுள் பல நூறு பேரில் ஒருத்தியாக இருக்கிறாள்.அந்த அம்மா உயிருடன் இருப்பாளா? மகன் இல்லாவிட்டால் உயிர் வாழ்வாளா? என்ற கடந்த கால பல நியமான நினைவுகளால் அடிக்கடி அரி;கப்படுவதனால் அந்தரித்துப்போகிறாள். இன்றும் தூக்கம் வரவில்லை. கடந்;த நாட்களில் நின்ற எதிர்பார்ப்புக்களை போர் பறித்துச்சென்று வெகு நாட்களாகி விட்டது.ஆனால் அவளது நினைவுகளை பறிக்கவோ அழிக்கவோ கோர யுத்தத்தால் முடியவில்லை.
அவளின் காயாத கண்ணீருடன் எதிர்பார்ப்பின் கண்கள் இன்னமும் வழிந்தவண்ணமாக உள்ளன.
                                  

Wednesday, 30 January 2013

பிரியமானவன்...............கவிதை

 உன்னுடன்..............



வாழ்ந்த நாட்கள்
கொஞ்சம்தான் - எனினும்
கோடி நாட்கள்
சுயநலமற்று
வாழ்ந்த சுகம்.
 
எப்படி மறப்பது
உன்னையும்
நீ அள்ளித் தந்த
பல வருட
ஆளுமை
அறிவையும்…….

நீ இப்போ என(ம)க்கு
இல்லையென்ற போது
நெஞ்சத்தின் தனிமை
நெருஞ்சி முள்ளாய்............
வலிக்கிறது இதயம்.

என் உயிரினும்
மேலானவனே,
உன் மூச்சுக்காற்றில்
வாழ்ந்தவர்கள் நாம்.
ஆனாலும்
உன் அந்த முடிவை
என்னால் நம்பவே
முடியவில்லை.

அந்த ஓர் நிமிடத்தில்
எ(ம்)ன் இதயமே
துடிப்பிழந்து போனது.
எ(ம்)மை
தவிக்கவிட்டுச் சென்றதெங்கே…..?

என்னவனே
உறவைப்பிரிந்து,
உணவை ஒறுத்து,
உறக்கத்தை தொலைத்து,
உன்னையே நம்பிய
எம்மை
இன்னும்
என்ன செய்யப்போகிறாய்.

இனியவனே,
யார் யாரோ
உன்னைத்
தூற்றுகிறார்கள்.
அறியாதவர்கள்
அலம்புகிறார்கள்.
நானோ இப்பவும்
உன்னை
விசுவாசமாய்
காதலிக்கிறேன்.
பிரிவின்போது தான்
அதிகம் தெரிகிறது
சுதந்திரம் பறிபோனதன்
வலியின் கொடூரம்.

நீ அழகானவன்.
பெரும் ஆளுமையானவன்.
அட்டவதானியும் கூட.
ஆனால்
அகங்காரமற்றவன்.
இரக்கமானவன் - ஆனாலும்
எம் கண்ணில்
இரத்தம் கொப்பளிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய்
அன்பே………….?

காலத்தின் தேவையால்
காணாமல் போனாயா?
நீ இல்லையேல் - இனி
எம் வாழ்வில்
மழையே இல்லையென
தடம் புரள்கிறது –
நிஜமான  நினைவுகள்
நெஞ்சக்கூட்டை
பலமாக அழுத்துகின்றன…………

ஆனாலும்
நீ உயிருடன்
இருக்கிறாய் என்ற
ஒற்றைச் சொல்லுக்காய்
காத்திருக்கிறேன்
கைகளில் விலங்கிடப்பட்டு................

 உன் பிரியமானவள்
 - மருத்துவமனை நிலா .நன்றி2010 ஈழநேசன் இணையத்தில் வெளிவந்த என் கவிதை

Tuesday, 29 January 2013

மெழுகிமுடிந்த வர்ணங்கள்.........கவிதை


வெறும்
வர்ணங்களால்
வடுக்கள் மறைந்து
போவதில்லை

...
காயப்பட்ட
சொந்தமெல்லாம்
கதறி கதறி வந்த

நாட்களில்
நானும்
காயத்துடன் கிடந்தேன்
வயிறு பிழந்து
வலிகளுடன;
...................................
அனாதரவானர்கள்
வீதிகளில்....

இன்று
வர்ணங்களால்
மறைக்கப்பட்ட
என் சுவர்களின்
வெடிப்புக்களிலிருந்து

என் ஆத்மா
அழுகிறது
நான் எல்லாம் ஓர்
வைத்தியசாலையா?
என



என்னால் கைவிடப்பட்டு
இறந்து போன உயிர்களின்
மனச்சாட்சிகுள்
இறந்து கொண்டிருக்கறேன்
.தினமும்See

.

Friday, 25 January 2013

துருப்பிடித்த காதல்


நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்


உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்

காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்

அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்

இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது

நீண்ட போரின்
பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்

இருந்தும்
 துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப் பிடித்த
காதலில் தான் ................

Saturday, 19 January 2013

குங்கும கேள்வி.............

அவள் ஏறியிறங்கிய
ஜ.சி.ஆர்.சி களும்
மனித உரிமைகளும்
ஏன் சாமிகளும் கூட
கைவிரித்து நிற்கஇப்போ
நெற் கபேகளில்
சனல்4 லிலும்
வீடியோக்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறாள் தன்
குங்கும கேள்வியை,

ஒவ்வொரு விடிலிலும்
இதயத்தில் இடியாய்
இறங்கும் உணர்வுகள்
கண்கள் பனிக்க
மனம் தடுமாற
சுட்டுவிரலை
வலிந்து பிடித்து
பொட்டிடுகிறாள்
நெற்றியில்,

அவள் இதயத்தின்
அவலத்துடிப்பு
யாருக்கும் புரியாது
அவள்தகிப்பு
கணாமல் போனா
கணவனுடன்
அவள்பொட்டும்
ஏன்
மனைவியின் சிரிப்பும் கூட
காணமலே போகவேனுமாம்
சமுகத்தின் கோட்பாடாம்,

எவரும்திணிக்காத
சுகந்திர உணர்வு
எம்மைபோல்

அவளிலும் வழிகிறது
வெறும் நம்பிக்கையின்
காத்திருப்புக்களோடு

Thursday, 17 January 2013

பனித்துளி
என்
ஆசைக் காதலனே
ஒளி வர
... நீ மட்டும் போவாய்
அப்போ
நான் மீண்டும்
தனித்துப் போகிறேன்
ஆற்றங்கரை நானலாய்
மரங்களின் அழகு
நிலாவொளி
ஆழ்ந்த அமைதி
அருவருப்பும்
பயங்கரமும் தந்தன
நீயில்லாத தனிமையில்
நீயில்லாத பொழுது
மழைத்துளி எனனை
ஆக்கிரமிக்கின்றது
அதிகாரத்துடன்

உன.
வரவுக்காய்
ஏங்கும் நாட்கள்
ரணங்களாய் விடிகின்றன
என் மேல்
காதல் கொண்ட
பனித்துளியே
காத்திருக்கின்றேன்
தனி நானலாயே............

Wednesday, 16 January 2013

வலி..........

கட்டுதறிகள் மட்டும்
காத்தித்துகிடக்கின்றன 
போர்பறித்து சென்ற 
வெள்ளச்சி பரம்பரையின் 
வரவுக்காய்........


சூரிய பெண்னே!

சூரிய பெண்னே!
உஜ்

மெதுவாகய் மெதுவாய்- உன்
கூரிய கதிர்களை விதைத்திடு
போரின் பற்களால் 
கடித்து குதறப்பட்ட
எம் தேசத்தில்
குழந்தைகள் கூட
பாதணியற்று நடக்கின்றார்கள்

தைத்திரு நாளே
மன்னித்து விடு
புதுப்பானையெடுத்து
பொங்கலிட முடியல்ல-
இன்னும் நானொ் அகதி

சூரிய உதயம் கானாத
காலைப் பொழுதொன்றில்
ஊா் இழந்தோம்
நாடு மீண்டதாம் -இன்று
நாம்மட்டும் மீளவில்லை

பற்றை மேவிய- எம்
வெற்று நிலம் போல்-எம்
கைகளும் வெறுமையே -இருந்தும்
படையல் செய்கிறோம் -

எப்போதும் வரற்றாத- எம்
கண்ணீரைப்போல
நம்பிகையின் காத்திருப்புக்கள் - எம்மில்
வழிந்துகொண்டிருப்பதால்