ஹாய் டா நலமா?
நான் அனுப்பிய இருமடலும் உன் கரம் சோ்திருக்க நியாயமில்லை தொலைதூரப்புள்ளியான உன் உறக்கம் கூட இரக்கமில்லா கனவுகளால்தினம் தினம் கிளித்தெறியப்படுவதை நான் அறிவேன்.............,இரவு இங்கு குளிரில் நனைந்து அமைதியாகிக் கிடக்கின்றது.கனத்த சூடான பெருமூச்சு நாளை விடியுமா?என்று தொண்டையை வரட்டிநிற்கிறது.கறல்பிடித்த கம்பி தாண்டும் காயப்பட்டு சீழ் பிடித்த காற்றை சுவாசிதபடிஎங்கோ ஒா்மூலையில் கால்கள் கடுக்க கைகள்விலங்கிடப்பட்டு தவித்துகொள்வாய்.......... ஒரு சில வருடங்களிற்கு முன் இராப்பாடிப்பறவைகளின் சிறகுகள் போல்அசைக்கவும் சிரிக்கவும்செய்த உன் விழிகள் இப்போ கதிரவன்முத்தமிட அல்லி மலர்போல ஒளிமங்கி நிறமிழந்து இருக்கிறதா?எப்போதும் பிடிக்காத அந்த சிகரெட்டிலிருந்து சுருள்சுருளாக வரும்புகை உன் சின்ன தடிமூக்கை தாண்டியும் உன் நரம்புகளை ஸ்திரமடைய வைக்கிறதா?கண்ணீா் மற கவலைவிடு ...........தடுப்பு காவல் தமிழா்க்கொரு பாடமடா?முகம் கான ஆசை தொலைதூரம் இருக்கிறாய் .......சிறகின்றி பறக்கின்றேன் உன் அருகிருந்து சிரிக்கின்றேன்

No comments:
Post a Comment