Friday, 7 March 2014

கருணை நதி பாகம் -8

8
                                                                             திவா அந்த மடலை தொடர்ந்து எழுதத் தொடங்கினான். எங்களுக்கு மிக அருகில்தான் அந்த எறிகணை விழுந்தது. பலத்த சத்தத்துடன் பாரிய புகை மண்டலம் எங்களைச் சூழ்ந்தது. காதுகள் செவிடாகிப்போய்விட்டன போலவும் கண்கள் மங்கிவிட்டன போலவும் உணர்ந்தேன். யாருக்கு என்ன நடந்ததென்று ஒன்றுமே தெரியவில்லை. எனினும் எல்லோரும் அழுதார்கள். பின்புதான் நிலைமை புரிந்தது. அதிஸ்ரவசமாய் எங்களில் எல்லோரும் உயிருடன் இருந்தோம். எனக்கும் தங்கையின் மகள் பவிதாவுக்கும் மட்டும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனக்கு நெஞ்சில் சிறிய காயம் பட்டிருப்பது தெரிந்தது. பவிதாவுக்குத்தான் கால்களிலும் கையிலும் பெரிய பெரிய காயங்களாய் தெரிந்தன. என்னசெய்தும் வெளியேறும் குருதியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனோ என்; கைகள் நடுங்கின. கையில் அகப்பட்ட ஒரு துணியினால் என் மார்பைச்சுற்றிக் கட்டிக்கொண்டு பவிதாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத் தீர்மானித்தேன். அந்த இக்கட்டான நிலைமையில் எங்களை மருத்துவமனைக்கு யாரும் தூக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? நாங்கள்தான் எங்கள் பிள்ளையை உடனடியாக கொண்டுவரவேண்டி இருந்தது.

                                       மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பவிதாவை தூக்கிக்கொண்டேன். கால்களில் வேகத்தைச் சேர்த்து வேகமாக மருத்துவமனையை நோக்கி ஓடிவந்தேன். தங்கையை எப்படியாவது அங்குவந்துசேர் என்று சொல்லிவிட்டுத்தான் ஓடிவந்தேன். அப்போது நான் என் வாயால் சுவாசித்தேன். பெரிது பெரிதான மூச்சை வாயால் இழுத்துவிட்டுக் கொண்டே ஓடினேன். போன பாதையெங்கும் மனித அவலக்குரல்களும் முனகல் சத்தங்களும் கேட்டுக்கொண்டேதான் இருந்தன. எனது காயத்திலிருந்து வழிந்த இரத்தம் என்னை முழுதுமாய் நனைத்துக்கொண்டிருந்தது. இறந்த மனிதர்களின் பிணங்களையும் மரணத்தின் பிடியில் சிக்கித்தவித்தபடி கிடந்த மனிதர்களையும் நான் கண்டேன். அவை எனது ஓட்டத்தை அதிகப்படுத்தின.
மருத்துவமனையை அடைந்ததும் ஒரு மயானத்தைக் கடந்து வந்துவிட்டவனைப்போல உணர்ந்தேன்.
                                                             அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு. என் வாழ்வைப்போல பூமியும் இருண்டுவிட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் வான வெளியெங்கும் தீப்பிழம்புகளைக் கண்டேன். பொழுது மங்கிவிட்டதால் சீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன். நான் பவிதாவுடன் நிலத்தில் விழுந்து காதுகளை பொத்திக் கொண்டேன். அந்த விநாடியில் எனது பின்னந் தலையில் காயம் பட்டது.
இரத்தம் சூடாகக் குபுகுபுத்தது. எழத்தான் முயற்சித்தேன். முடியவில்லை. அப்படியே ஒருபக்கமாய் உருக்குலைந்து சரிந்தேன். எனது மங்கிய பார்வையில் நீதான் ஓடிவந்து என்முன்னால் நின்றாய். அப்போதுகூட நீ மிகுந்த நிதானம் மிக்கவளாய்த் தெரிந்தாய்.
                                                   எனக்கு நினைவு திரும்பியபோது இளம் வைத்தியன் ஒருவன் எனக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தான்.
'உங்களது நெஞ்சுக் காயத்திற்கு ரியூப் போட வேணும். நல்லகாலம் கொஞ்சம் முந்தி வந்திட்டிங்கள்.' என்றான்.
                                                                                    வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கும் வேளையிலும் அவன் நிதானமாக என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான். சுள்ளென என் விலாவில் வலித்ததை உணர்ந்து அருண்டேன். சற்றுநேரத்தில் அவ்விடம் விறைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அவன் என் மார்பினுள் ரியூப்பை செலுத்தும் முயற்சியில் இறங்கினான். ரியூப் சரசரவென உள்ளிறங்கியதை உணர்ந்தேன். அச்சமும் வேதனையும் என்னை பாடாய்;படுத்த தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டேன்.
அடுத்த கட்டிலில் நீ என் பவிதாக் குட்டிக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தாய்.
                               'ஆ. என் பவிதாக்குட்டி உயிரோடு இருக்கிறாள். அது போதும் அதுபோதும்' என்று என் உள்மனது சொல்வதை உணர்ந்தேன்.
வெடியோசைகளை நித்தம் நித்தம் கேட்டு பழக்கப்பட்டு விட்டாலும் திடீரென மருத்துவமனைக் கட்டிடத்தின் பகுதியில் விழுந்த எறிகணை எல்லோரையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருந்தது. காயப்பட்டுக்கிடந்தவர்களின் கதறல் ஒலி வானத்தைப் பிழந்துவிடும்போல அதிர்ந்தது. சிலகணம் மூடிவிட்ட கண்களை நான் திறந்தபோது எனக்கு வைத்தியம் செய்துகொண்டிருந்த வைத்தினின் நெஞ்சில் இரத்தம். அவனது மார்பில் சிதறுதுண்டேதும் பாய்ந்திருக்க வேண்டும். படாரெனக் கீழே விழுந்தான்.
                                                                                        அவனது மூக்கிலும் கடைவாயிலும் இரத்தம் வெளியேறியது. கையில் பிடித்த கத்தரிக்கோலும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்புமாய் அப்படியே அவன் நிலத்தில் அமைதியாகிக் கிடந்தான். அதைக் கண்டவுடன் நான் என்னை அறியாமல் கத்தினேன்.
'ஐயோ ஐயோ டொக்டரை யாராவது காப்பாத்துங்க. காப்பாத்துங்க' என்று. அப்போதும் நீதான் ஓடிவந்தாய். அந்த வைத்தியனின் உடலைவிட்டு உயிர் போய்விட்டது என்பதை கணப்பொழுதில் உறுதிப்படுத்தினாய். எனினும் நீ அவனது சாவுக்காகப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பதிலேயே கருத்தாக இருந்தாய். அவன் செய்த குறை வேலையை நீ தொடர்ந்தாய். எனது நெஞ்சில் இறக்கிய ரியூப்பிலிருந்து வெளியேவந்த குருதியை மீண்டும் எனக்கே ஏற்றினாய். சேலைன் போத்தில் எனக்காகவே இருந்ததைப்போல ஒன்றை எடுத்துக்கொண்டோடிவந்து என்னுடலில் ஏற்றினாய்.
                                                                               அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு துடிப்பிருந்தது தெரியுமா? அதை நீ புரிந்துதான் செயற்பட்டாயா இல்லையா தெரியவில்லை. ஆனால் நீ உன் கடமையில் கருத்தூன்றியவளாய் செயற்பட்டாய். உன் துரிதமான செயற்பாட்டால்தான் அன்று என் உயிர் காப்பாற்றப்பட்டது. எனக்கு வைத்தியம் செய்தவனின் வெற்றுடல் அப்படியே அங்கேயேதான் கிடந்தது. அவ்வளவு நிதானமாகச் செயற்பட உன்னால் எப்படி முடிந்தது? என்னால் இப்பவும்கூட நம்பமுடியவில்லை. ஒன்றாக ஒரே மருத்துவமனையில் உன்னுடன் சேர்ந்து வேலைசெய்த தியாகி இறந்துவிட்டான். அவனுக்காக நீ, துளி அளவும் தேங்கிவிடவில்லை. ஆனால் நான் யாரோ ஒருவன்.உனக்கு முன்பின் தெரியாத சாதாரண மனிதன். எனினும் ஒவ்வொரு உயிரின் பெறுமதிக்காகவும் நீ வேலை செய்தாய். நீ அந்த வைத்தியனுக்காக, உனது தோழனுக்காக அன்று சில கணங்களேணும் அழுதுகொண்டு நின்றிருப்பாயானால் எனது உயிர் என்னுடலைவிட்டும் பறந்திருக்கும்.
                                                                               அத்தனை இயலாமையிலும் உன்னைத் தொடர்ந்தன என் கண்கள். உனது கண்களும் குளமாகித்தான் இருந்தன. அப்பப்போ சில துளிகள் உன் கன்னங்களில் உருண்டோடியதைக் கவனித்தேன். எனினும் உனது கைகளும் கால்களும் ஓரிடத்தில் தரிக்கவேயில்லை. ஓடியோடிக் கடமை செய்தாய்.
இந்த மடலை நான் உனக்கு எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் எனது பின்னந்தலையில் ஊசியால் குத்துவதைப்போன்ற வலியை உணர்கின்றேன். அன்று எனக்கும் பவிதாவுக்கும் அவசரமாகக் குருதி ஏற்றவேண்டி இருந்தது. சொந்தங்கள் யாரும் குருதிவழங்க முன்வரவில்லை. மனதார வழங்கிவிடுமளவுக்கு அவர்களிடம் போதியளவு குருதி உடலில் இருக்கவில்லை. அல்லது அடுத்த நிமிடம் அவர்கள் காயப்பட்டாலும் அவர்களுக்கேற்படப்போகும் குருதியிழப்பு அவர்களை அல்லவா சாகடித்துவிடும். யாரையும் நோக முடியாது. பலபேரிடம் காசு பணம் கொடுத்துக் கெஞ்சியும் கிடைக்காத குருதியை நீதான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் வழங்கினாய். உன்னிலிருந்து எடுத்தேற்றி எங்கள் இருவரின் உயிர்களையும் காப்பாற்றினாய். அப்படி எத்தனை பேரின் உயர்களைக் காப்பாற்றி இருப்பாய் நீ. உன்னை ஒரு சாதாரண மருத்துவத் தாதியாகவோ மருத்துவராகவோ என்னால் பார்க்க முடியாது. நீ ஒரு சாதனைப் பெண். உன்னளவில் அல்லது உன் தோழர்களளவில் யாரும் மருத்துவம் செய்திருக்க முடியாது. அதை என்னைப்போன்ற வன்னிமாந்தர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். உலகத்திற்கு உங்கள் பணியின் உயர்வைப்பற்றித்
                                         ஏனோ திவாவிற்கு கண்கள் கலங்கின. தியாகிகளின் உழைப்பை எண்ணிக் கசிந்தனவா அல்லது அவனது இயலாமையை எண்ணிக் கசிகின்றனவா என்பதை அவனால் இனங்காண முடியவில்லை. தொடர்ந்து அவனால் எழுத முடியவில்லை. அப்படியே வைத்துவிட்டு எழுந்து நின்றான். கண்களைத் துடைத்துவிட்டு சிறிதுநேரம் நடைபழகினான். அந்த நடை மிகவும் தளர்ந்துபோன அவனது இதய வலிமையைத்தான் காட்டியது.
ஒருவரின் சோகம்     இன்னொருவரையும் எப்படிச் செயலற்றவராக்கிவிடுகிறது என்று நினைத்தான். அவனை வேறெவரும் இவ்வளவுதூரம் சிந்திக்கவைத்தில்லை.      .................தொடரும் ....................

-மிதயா கானவி-

Tuesday, 25 February 2014

கருணை நதி பாகம் -7


பார்த்தீபன் என்ற பெயரைக்கேட்டதும் திவாவிற்கு அவளையே கண்டு கதைப்பதாகப் புத்துணர்வு கிளம்பிவிட்டது.'சொல்லடா மச்சான்'
'திவா நீ சொன்ன ஆளை கண்டு கதைச்சன். சுதாகர் சங்கவி. ஆள் இப்ப ஆனந்தகுமாரசாமி முகாம். எஸ் வலயம்.கொட்டில் இலக்கம் 66இன் கீழ் 2.'
'பார்த்தி டேய், அவ்வளவுந்தானா தெரியும்?'
'வேற என்ன தெரியணும்?'
'அவளேன் கொஸ்பிட்ரலுக்கு வந்தாள்?'
என்று தயங்கினான்.
'அவளுக்கேதும் பெரிய வருத்தமோ?'சிரித்தான் பார்த்தீபன்.'அப்பிடிஒண்டுமில்லடா. குருதி பரிசோதிக்கப் போனவள். முடிவு தெரியல்ல. நான் கதைக்க முயற்சித்தன். அவள் கதைக்க விரும்பேல்ல. திவா இனியாவதுஅவள்யாரெண்டுஎனக்குசொல்லனடா.''சும்மா.....பழக்கம்.அவளவுதான்டா மச்சான்''அப்பிடித் தெரியேல்ல எனக்கு. பரவாயில்ல. மலிஞ்சால் சந்தைக்கு வருந்தானே. அப்ப பாக்கிறன்' என்றான் நண்பன்.

                                    திவாவிற்கு புதிய உலகத்தில் பறப்பதைப்போல இருந்தது. பார்த்தீபனுக்கு நன்றிகூடச் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டான். திரும்பவும் பார்த்தீபனே எடுத்து சீண்டியபோதுதான் திவா தன் நினைவுக்கு வந்தான்.'பார்த்தீபன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்?' என்பதை நினைக்க திவாவிற்கு வெட்காக இருந்தது.
'சொரிடா மச்சான். உனக்கு நன்றியடா நன்றி நன்றி' என்று பலதடவை கூறினான்.'காதல் வந்தால் எல்லாம் மறந்திரும்தான். பரவாயில்ல உன்ர நிலை புரியிதுடா. ஓ.கே. பாய்' என்று விடைபெற்றான் பார்த்தீபன்.
இப்போது அவனது மனம் ஓரளவு குளிர்ந்தது. சங்கவிக்கு உடனே ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று காகிதமும் பேனையுமாய் குந்தியவன் என்னவென்று எழுதுவதெனத் தெரியாமல் தவித்தான். பின்பு,

                                                                                    அன்புடன் சங்கவிக்கு என்று எழுதத் தொடங்கினான். உனது தியாகத்தால் நான் நலமாக இருக்கின்றேன். நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிய ஆவலாய் இருக்கின்றேன். உனக்கு என்னை யாரென்று நினைவிருக்காது. எனினும் என்னைப்போல பலபேரை காப்பாற்றி இருப்பாய். அவர்களின் வாழ்வுக்காக உன் வாழ்வின் வசந்தங்கள் பலவற்றை நீ இழந்திருக்கலாம். நானும் எனது குடும்பமும் உன்னை என்றுமே மறந்துவிட முடியாது. என் உடலில் உன் குருதி கலந்திருக்கிறது. நாம் இருவேறு உடல்கள். ஒரு உயிர்தான் என்று உணர்கின்றேன். காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மானப் பெரிது என்பார்கள். சங்கவி உன் உதவிiயை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கவே மாட்டேன்.அதுசரி சங்கவி,உனக்கு என்ன நடந்தது? வன்னிப்போரில் கடைசிநாள்வரைக்கும் ஒரு வைத்தியராக இருந்து எத்தனை உயிர்களை காப்பாற்றியவள் நீ. எத்தனை பேருக்கு ஆலோசனைகளையும் ஆறுதலையும் தந்தாய். இன்னும் எத்தனை பேர் உன் பெயரைச்சொல்லி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
                              கண்ணே, நீ மட்டும் எதற்காக இப்படி இருக்கிறாய்? என்னால் இதனை தாங்க முடியவில்லை. உன்னாலும் மனுசியாக வாழமுடியும். என்னைப்போல சுயநலமாக வாழ்ந்து திரிந்தவளல்ல நீ. உயிரே மிச்சமென ஊசலாடிய அவகாசமற்ற அந்தப் பொழுதிற்கூட ஓயாது உழைத்தவள் நீ. எந்த மனிதனின் நெஞ்சில்தான் கவலைகள் இல்லை சொல்லு. எல்லோரும் பைத்தியகாரர்கள் ஆகிவிட முடியுமா? விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத்தான் வேண்டும். அவல வாழ்க்கைக்குள் மூழ்கிப்போகும் சில உள்ளங்கள் அதிலிருந்து விடுபடத் துணிவிருந்தாலும் கடந்தகால நினைவுகள் அவர்களை எழுந்திருக்க விடுவதில்லை. மற்றவர்களுக்காக ஓயாமல் எழும் எண்ணங்கள் தனக்கென வரும்போது மட்டும் மௌனித்துப்போகின்றன.
                                      வாழ்க்கை ஒரு சவால். துணிந்து செயற்படுபவனே சாதிக்க முடியும். வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனை நடைமுறைப் படுத்துபவனுக்கல்லவா அதன் கடினம் புரியும் என்று நீ பேசுவது எனக்குக் கேட்கிறது. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவதைச் சந்திப்போம். ஏன் சங்கவி உனது தொழிலை தொடர்ந்து செய்ய நீ முயற்சிக்கவில்லையா? நீ வாழாவிட்டாலும் மற்றவர்களுக்காக உருகும் மெழுகுவர்த்தியாய் இருக்க முயற்சி செய். எப்பொழுதும் நீ நீயாகவே இரு. எமது விடுதலைப் போராட்டம்தான் தோற்றுவிட்டது. உணர்வுகள் சாகடிக்கப்பட்டு விட்டாலும் உணர்வுகள் சாகா வரம்பெற்று இருக்க வேண்டும். நான் இதைச் சொல்ல, அதுவும் உனக்குச்சொல்ல அருகதை அற்றவன்தான். இதுவரை பச்சைச் சுயநலவாதியாகவேதான் இருந்தேன். இனிமேலாவது திருந்தி வாழவேண்டும் என்று முயற்சிக்கின்றேன். தயவுசெய்து நீ மாறிவிடு. சொல்வதற்கு நீ யார் என ஏளனமாகச் சிரிக்கிறாயா? சொல்கிறேன். நான் யாரென்று சொல்கிறேன்.
                                                                         இடம்பெயர்ந்து பல வடுக்களைத் தாங்கிய வன்னி மக்கள் இனி எதுவுமே தேவையில்லை. உயிர் மட்டும் போதும் என்ற நிலையில்தானே போரின் இறுதிநாட்களில் இருந்தார்கள். அது உண்மைதான். அலுவலகங்களோ பாடசாலைகளோ இயங்கவில்லை. உயிர் வாழ்விற்கான அத்தியாவசியத் தேவைகளை மட்டும் பயந்து பயந்து செய்து முடித்தார்கள். அநேகமான நேரங்களை காப்பகழிகளில்தான் கழித்தார்கள். நான்கூட என் உயிரைப் பாதுகாக்க அப்படித்தான் இருந்தேன். ஆனால் நீ அப்படி வாழவில்லை. மருத்துவமனையில் விளக்கேந்திய பெருமாட்டியாய் இரவு பகலாய் கண்விழித்து நின்றவள்.  சீறிவரும் சன்னங்களுக்கும் சிதறிப்பாயும் குண்டுகளுக்கும் நடுவே நின்று வேலை செய்தவள். சேவை செய்தவள்.
நானும் எனது குடும்பமும் முள்ளிவாய்க்காலில் பதுங்குகுழி ஒன்றின்மேல் தறப்பாளைக்கட்டி பதுங்கு குழிக்குள்ளேயே இருந்தோம். எங்களிடம் எஞ்சியிருந்தது ஒரு தறப்பாளும் ஒரு பானையும் சட்டியும் மூன்று கோப்பைகளும் மட்டுமே. உன்னிடம் அதுவும் இருந்திருக்காது. எறிகணைகளோ தாறுமாறாக விழுந்துகொண்டிருந்தன. அன்றும் வழமையைப்போல காலை ஆறு மணியிலிருந்து நண்பகல்வரையும் வெளியில் தலை காட்டவே முடியவில்லை. எனது தங்கையின் பிள்ளை பவிதாவைச் சமாளிப்பது எல்லோருக்கும் பெரிய சிரமமாக இருந்தது.
'வெளிய போகப் போறன். நான் வெளிய போகப் போறன்.' என்று அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தாள்.

                                                   'அழுதால் அழட்டுக்கும். பிள்ளை ஒண்டும் கரைஞ்சு போயிடாது. வெளிய போகவிட வேணாம்.' என்று அம்மா இரைந்தார். என்னாலும் தொடர்ந்து காப்பகழிக்குள் இருக்கமுடியவில்லை. ஒரே குழிக்குள் பன்னிரண்டுபேர் இருந்தோம். கால்கைகளை அசைக்கக்கூட இடமில்லாத நெருக்கடியில் அதிக நேரத்திற்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழங்கால்கள் மடிந்தபடியே நீண்டநேரம் இருந்ததால் மூட்டுகள் வலித்தன. என்னடா நரக வாழ்க்கை இது என்று விரக்தியும் சலிப்பும் எழுந்தாலும் உயிரை காப்பாற்றிக் கொள்தற்காக அந்த வலிகளையும் சகித்துக்கொண்டு கிடந்தோம்.
பகற்பொழுது கழிந்து மாலையாகியபின்னும் கடற்கரையில் வெயில் தாளவில்லை. ஒவ்வொருவராக வெளியில் வந்துநின்று பெரூமூச்சுகளை விட்டுக் கொண்டோம். எமக்காகவே குறிபார்த்து எறியப்பட்டதைப்போல எறிகணையொன்று திடீரெனக்கூவிவந்து எமக்கருகில் வெடித்துச்சிதறியது.

                                                           திவாவினால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவ்வளவுநேரமும் எழுதிய      தனது பழைய நிலைமையை மீண்டும் நடப்பதைப்போலவே உணர்ந்ததனாலோ என்னவோ மனம் பதறியது. உடல் மிகவும்சோர்ந்துபலவீனப்பட்டது.விரல்கள்பேனைபிடிக்கக்கூடவலுவற்றுவிட்டனபோல உழைந்தன..............................தொடரும் ...........................

மிதயா கானவி

Thursday, 20 February 2014

கருணை நதி பாகம்-6

                                      
                                                                                                                                                                                                                                                                                                                               உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டவளாய் அவள் மெதுவாக வந்தாள். தாய்தான் அவளிற்குக் கிட்டவாகச்சென்று கம்பி வேலிக்கு மேலாகக் கைகளைப்போட்டு தன் மகளைக் கட்டியணைக்க முயன்றாள்.'யார் நீ?'என்கின்ற தோரணையில் வெறித்துப் பார்த்தாள் மகள். அவ்வளவுதான். அந்தத்தாயின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.ஏனென்று தெரியாமலேயே மகளும் அழதாள்தாய்தான் தன் மனதைத் தேற்றிக்கொண்டு என்ன நடந்ததென மகளிடம் கேட்டறிய முயன்றாள். எனினும் அதைப்பற்றி ஒருவார்த்தைகூடக்கேட்காமலேயே சந்திப்புக்கான நேரம் முடிவடைந்துவிட்டது.எல்லோரையும் ஒவ்வொருவராக கடமையில் நின்ற சிப்பாய் வெளியில் அனுப்பினான்.அந்தத் தாயாரையும் பத்தே நிமிடத்திற்குள் வெளியேற்றிவிட்டான். எதுவுமே பேசாத அழுகையுடன் மாத்திரமே அவர்களின் சந்திப்புநேரம் முடிந்துவிட்டது. அப்படித்தான் அங்குநின்ற பலரது நிலைமையும் அமைந்திருந்தது. அந்தத் தாயார் மனதுக்குள் அழுதுகுளறியபடியே வெளியேறினார்.

                                            அவளின் வாழ்க்கை வழிநெடுக, வலியும் வேதனையும் நிராகரிப்பும் நிறைந்ததாய் நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்தபின் அவளது மனது ஓரளவு அமைதிப்பட்டிருந்தது எனலாம். ஆனாலும் உடல் நோயெதிர்ப்புச் சக்தியை இழந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலதிக சிகிச்சைக்காக அவள் மருத்துவமனைக்குச் செல்லவேண்டி இருந்தது.   அன்று திங்கட்கிழமையாக இருந்தமையால் நோயாளர்களது நெருக்கடி மருத்துவமனையில் அதிகமாகவே இருந்தது. அவளும் முகாமிலிருந்து வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அன்று திவாவும் தனது மேலதிகாரியுடன் மருந்துவமனைக்கு வந்திருந்தான்.

                                             எதிர்பாராத விதமாக அவளை மருத்துவமனையில் கண்ட திவாவிற்கு உணர்வுகள் கொந்தளித்தன. அவனது கால்கள் இயங்க மறுத்தன. தன்னை ஒருவாறு அமைதிப்படுத்த முயன்றபடியே அவளருகே வந்துசேர்ந்தான்.
'அக்கா,' என்று விக்கித்தான். எங்கோ கேட்ட குரலாய் இருக்கிறதே என்று நினைத்தபடி திரும்பிய அவளின் பார்வையில் புதிய ஒளி பிரகாசித்தது. ஆனாலும் அது அதிக நிமிடங்கள் நிலைத்து நிற்கவில்லை. மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டது.அடுத்து வைத்தியரிடம் உள்ளே செல்லுமாறு தாதி அழைத்தார்.
'சங்கவி,சங்கவி. வாங்க. உள்ள போங்க'திவா துடித்துப் போனான். வாழ்க்கையில் என்னென்ன விசித்திரங்கள் எல்லாம் நடக்கின்றன. ஏனிப்படி? எத்தனை நாட்களாய் அறிந்த தெரிந்த ஒருத்தியின், மிகவும் வேண்டப்பட்டவளாய் மனம்சொல்லும் ஒருத்தியின் பெயர்கூடத் தெரியாமல் கடந்த அந்த நாட்களை நினைக்க அவனுக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது.
'சங்கவி.... சங்கவி.....'என்று முணுமுணுத்தது அவனது இதயம். அவளது பெயரை அறிவதற்காக எத்தனை தடவைகள் அலைந்திருப்பான். இதோ அவளின் பெயரைத் தெரிந்துகொண்டுவிட்டான். அவளுக்கு அருகில்தான் நிற்கிறான். சங்கவி எப்போது வெளியில் வருவாள் எனக் காத்திருந்தான். எனினும் உள்ளேசென்ற அவள் விரைவில் வருவதாகக் காணவில்லை. அவனது அவசரத்திற்கு வைத்தியரிடம் சென்றவள் உடனேயே திரம்பி வருவாளா?
                                                   நேரமோ வேகமாக ஓடியது.திவா மேலதிகாரியுடன் புறப்படவேண்டி இருந்தது. அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிட்டுச்செல்ல மனமின்றித் தவித்தான். அதே மருத்துவ மனையில் வேலை செய்யும் பார்த்தீபனின் உதவியை நாடி ஓடினான். 'தீபன், எனக்கொரு உதவி செய்யணும்' என்ற திவாவின் குரலில் அவசரம் தெரிந்தது.
'யாருக்கு என்ன? உடம்பு சரியில்லையா?''இல்ல மச்சான். நான் அவசரமா போகவேண்டி இருக்கு. வைத்தியரின் அறையில் எனக்குத் தெரிந்த ஒருவர் போயிருக்கிறார். பெயர் சங்கவி. அவளது தற்போதைய முகவரியை வாங்கி எனக்கொருக்கா போன்ல சொல்லணும்''அவ்வளவுந்தானா. செய்தால் போச்சு. நானும் பார்;த்தால் போச்சு.''அவள் உன்னோட கதைப்பாளா தெரியேல்ல. மஞ்சள் நிற சுடிதார் போட்டிருக்கிறாள். மெனிக்பாம்ல இருந்து வந்திருக்கவேணும்.' என்றபடி தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்தான்.
'நான் போட்டுவாறன்டா' என்றவன் இரண்டடி வைத்துவிட்டு
'மறந்திடாதடா' என்றான்.'கவலைப்படாமல் போ மச்சான். நான் இப்பவே போய் விசாரிக்கிறன்' என்று கையசைத்தான் பார்த்தீபன்.
                           
                                         அலுவலக வேலையைக்கூட திவாவினால் நிம்மதியாகச் செய்ய இயலவில்லை. யார் தொலைபேசி எடுத்தாலும் பார்த்தீபனோ பார்த்தீபனோ என்று பலதடவை ஏமாந்தான். அவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்காமல் வந்ததுதான் பெரிய தப்பு. இவனாவது எடுத்துக் கேட்டிருப்பான். அந்தநேரம் அவனது இலக்கத்தை வாங்கத் தோணவில்லையே.... அவளைக் கண்டால் நான் கொதித்துப் போகிறேனேன்? ஏனென்றே புரியவில்லை. சங்கவியுடன் ஒருநாள்கூட நான் என்னைப்பற்றிக் கதைக்கவில்லை. ஏன் என்னால் அவளை மறக்க முடியவில்லை?மனமே ஏன்? ஏன் இப்படி ஏமாற்றப்படுகிறேன்? நான்; முற்பிறப்பில் யாரையும் ஏமாற்றி இருப்பேனோ? இன்றுகூட சற்று முன் அவளைக் கண்டிருந்தால் அவளுடன் கதைத்திருப்பேனே. சங்கவி என்னிடம் மனம்விட்டுக் கதைத்திருப்பாளா? இல்லை உன்னைத் தெரியாது என்று அவமானப் படுத்தியிருப்பாளா?பதிலை யாரிடம் கேட்கலாம்? அவள்தான் காணல் நீராய் என்முன்னால் தோன்றி மறைந்து போகிறாளோ?
                                                                       இன்று எதற்காக வைத்தியசாலைக்கு வந்திருப்பாள்? சின்னச்சின்ன வருத்தங்களுக்கெல்லாம் முகாமைவிட்டு வெளியில் அனுப்பமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியானால் பெரிய வருத்தம்தானோ? என்றெல்லாம் அவனது மனது அவளுக்காகத் துடித்துக்கொண்டிருந்தது. வீட்டில்கூட யாருடனும் அவன் மகிழ்ச்சியாகப் பேசுவதில்லை என்றானது. தானும் தன்பாடுமாக இருந்தான். படுப்பதற்கு அவனுக்குப் பஞ்சணை இருந்தது. பார்ப்பதற்கு சினிமா இருந்தது. உண்பதற்கு அம்மா சமைத்துவைக்கும் சுவையான உணவு இருந்தது. எனினும் எதிலுமே அவனுக்;கு நாட்டம் இருக்கவில்லை. சங்கவி. சங்கவி உன்னை நான் எப்ப பார்த்து கதைப்பேன். எப்பிடியெல்லாம் தேடி அலையிரன். நீ மட்டும் அப்பப்ப வந்து என்ர மனசைமட்டும் தொட்டுட்டு ஓடிருவாய். இது உனக்கே சரியாய் இருக்கா? நான் படும்பாடு உனக்கெப்படிப் புரியப் போகிறது? உன்னை நான் பார்த்தபோது நீ அணிந்திருந்த கிழிந்த பாவாடையும் அதற்குப் பொருத்தமில்லாத சட்டையுமாய் நீ முகாமில நின்ற தோற்றம்தான் கண்ணுக்குள நிக்கிது. ஆனால் இண்டைக்கு மஞ்சள் சுடிதாரோட பார்த்தது மனதுக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு. சங்கவி உனக்கு என்ன நடந்தது? ஏன் மாறினாய் என்று அறியாமல் துடிக்கின்றேன்' என்றெல்லாம் தனக்குள்ளேயே நொந்துகொண்டு படுத்திருந்தான்.

                                      அவனது தொலைபேசி சிணுங்கியது. வேண்டா வெறுப்பாக எடுத்தான்.
'ஹலோ, யார்?'
'ஹலோ மச்சான் நான் பார்த்தீபன்'
என்றதும் திவா துள்ளி எழுந்தான். ..................தொடரும் ..................

மிதயா கானவி



Friday, 14 February 2014

கருணை நதி பாகம் -05

                     
                                                                                                                                                                             திவாவின் இதயம் ரணமானது. தனது கௌரவத்தைக்கூடப் பார்க்காமல் எழுந்து அவளின் பின்னால் ஓடவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அவ்வாறு அவன் செய்யவில்லை. ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவன் மட்டும் இருக்கையில் இருந்தான் மௌனமாக. மனமோ அவளின் பின்னால் கடல் அலைகளின் கொந்தளிப்புப்போல் இரைந்தபடி ஓடியது.
                
                            அந்த ஒன்றுகூடல் முடிந்தவுடன் முகாமைவிட்டு அவன் வெளியேற வேண்டியவன் ஆனான். திவாவிற்கு இதயத்தில் பாராங்கல்லை வைத்திருப்பதைப்போல சுமையாகக் கனத்தது. ஒன்றுகூடல் முடிந்ததும் அவனுடன் வந்தவர்களுடன் அவனும் முகாமைவிட்டு வெளியேறினான்.
பல இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வைத்திருப்பதைப்பற்றி எல்லாஊடகங்களிலும்பரபரப்பான       செய்திகள் வந்தவண்ணமேதான் இருக்கின்றன.                                                                                                                 யாழ்ப்பாணத்தில்இருந்தஅவளின்தாய்துடித்துப்போனாள்.                                                                                அவளுடனான சிறிய முரண்பாடு காரணமாக நீண்ட நாட்களாக தாய் கோபத்துடன் இருந்தார். ஆனாலும் அவள், தான் பெற்ற பிள்ளை அல்லவா? அவள்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி. கஸ்ரமென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள். இப்போது அவளுக்கு எத்தனை வயதாக இருந்தாலும் அம்மாவுக்கு அவள் எப்போதுமே சிறியவள்தான். அவளைப்பற்றி பலரிடம் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறார். எந்தவொரு தகவலும்தான் கிடைக்கவில்லை. ஐயோ என்ர பிள்ளை எங்க எண்டாலும் உயிரோட இருக்க வேண்டும் என்று அந்தத் தாய் ஏறி இறங்காத கோவிலே இல்லை. இரண்டு மாதங்களாக வவுனியாவிற்கு வந்து மகளைத்தேட முயற்சித்தார். இறுதியாக எல்லா விசாரணையும் முடித்து பார்ப்பதற்கான அனுமதி தாயாரிற்கு வழங்கப்பட்டது. அதுவும் ஏ-9 பாதையின் ஊடாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் அச்சமும் கொஞ்சம் எட்டித்தான் பார்த்தது.
                                                        அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார். அந்தத் தாயாரிற்குத் தெரிந்தவர்கள் என்று அங்கு யாரும் இருக்கவில்லை. நெஞ்சம் இலேசாய் படபடக்கத்தான் செய்தது. ஜன்னலோரமான இருக்கையில் அந்தத்தாய் அமர்ந்து கொண்டார்.
வயதானஒரு மூதாட்டிம் அருகில் அமர்ந்தார். சரியாக 6.00 மணிக்கு இராணுவத்தினரின் ரக் வண்டியைத் தொடர்ந்து சுமுகமாக இவர்களின் பேருந்தும் போய்க்கொண்டிருந்தது. பேருந்தும் பயணித்துக்கொண்டிருக்கவே அந்தத் தாய் பேருந்துள் இருந்தவர்களை அவதானித்தார்.
அந்தத்தாய்க்கு நிலைமை புரிந்தது. அநேகமானவர்களின் தலைமுடி வெளீரென மின்னின. ஐம்பதைத் தாண்டிய முதியோர்கள்தான் பேருந்தில் பயணிக்கின்றோம் என்பதை நினைக்க உசாராகவே இருந்தது. பேருந்து மீசாலையைத் தாண்டி வரவும் எல்லோரும் தெய்வங்களை வேண்டி வாயினுள் முணுமுணுத்தார்கள்.

               பளை, முகமாலைப் பகுதியை  அண்மிக்க பயம் கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சை அடைப்பதைப்போல இருந்தது. தலையறுந்த தென்னைகள் அரையும் குறையுமாக எரிந்த வாகனங்கள், பெரிய பெரிய மண் அரண்கள் எல்லாமே போரின் வடுக்களைத் தாங்கி  நின்றன. அந்த இடங்களில் இராணுவ வீரர்கள் மழைக்கு முளைத்த காளான்களைப்போல அங்குமிங்கும் நின்றனர்.
இன்னுமொரு பகுதியினர் முகமூடிகளை அணிந்துகொண்டு நின்று மண்;ணை கிளறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணிவெடிகளை அகற்றுகின்றார்கள் என்றும் அவர்கள் அணிந்திருப்பது தற்பாதுகாப்புக்கான முகமூடி என்பதும்          அந்தத் தாயாரிற்கு புரிந்தது.
                                                அவர்களின் பேருந்து ஆனையிறவை அடைந்தது. வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளே பயங்கர சுழிகள் நிறைந்த கடலின் சுழற்சிபோல மனம் வேகமாக சுழன்றுகொண்டிருந்தது.ஆனையிறவை புலிகள் மீண்டும் கைப்பற்றியபோது உலகமே அதிசயித்து நின்றதும், ஏன் அந்தத் தாய்கூட ஆச்சரியப்பட்டு தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் விழுந்து விழுந்து படித்ததும் இப்போது அவருக்கு நினைவில் வந்தன.
                                                         பரந்தன் சந்தியில் பேருந்து சில நிமிடங்கள் நின்றன.ஐயோ என் மகள் உயிருடன் இருப்பாளா? இப்படியான கெடூரமான போரில் அவள் எப்படித்தான் தப்பியிருப்பாள்? என்று அந்தத் தாயாரின் மனம் நியாயமாகக் கேள்விகேட்டு பதில் தெரியாமல் வரண்டு தவித்தது.மோட்டார் கருவிகளோடு சந்தியிலிருந்த புலிவீரன் குட்டிசிறியின் சிலை, நிலத்தில் விழுந்து குப்புறக்கிடந்தது. சின்னாபின்னமாகச் சிதறிக்கிடக்கும் வீடுகள், கடைகள், பாடசாலைகள், கூரைகளுடன் இடிந்து பிரண்டு கிடக்கும் பெரிய மண்டபங்கள்,பரந்தன் சந்தியிலிருந்த ஊர்தி சுத்திகரிப்பு நிலையத்தில் எரிந்து கருகி எலும்புக்கூடாய்க்கிடக்கும் வாகனங்களின் எச்சங்கள். 

                                          கிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்குப் பக்கத்தில் இருந்த கிளிநொச்சி நகரத்துக்கான நீர்த்தாங்கி,அரைவாசி மண்ணில் புதைந்து தெரிந்தது. இவற்றைப் பார்த்த அந்தத் தாயாரிற்கு இந்த இடத்தில் யாரும் உயிர்தப்பி இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.'என்ர செல்ல மகளுக்கு உயிருக்கு ஒன்றும் நடந்திருக்கக்கூடாது' என்று மனதில் நினைத்தபடி, அடியோட சரிந்துகிடந்த முருகனைப் பார்த்ததும், சிதைந்து கிடந்த மாதாவைப் பார்த்தும் வணங்கியபடியேதான் இருந்தார் அந்தத் தாயார்.

                                                          கிளிநொச்சி பொது மருத்துவமனையைப் பார்த்து கதிகலங்கினார். இதற்கே இந்த நிலையா? இங்குதான் என் பிள்ளையும் நின்று வேலை செய்தாள். ஜன்னல் ஊடாகத் தலையை நீண்டி மருத்துவமனை வளாகத்தை பார்த்தார் அந்தத்தாயார்.அந்த இடமோ எந்தச் சன நடமாட்டமும் அற்று, சுடுகாடாய் தெரிந்தது.வீதியோரமாக வளர்ந்திருந்த புதர்கள், வேலிக் கிளுவைகள் எல்லாம் சடைத்து நின்றன. பெரிய மரங்களெல்லாம் கந்தகப் புகையால் கருகி பெரிய பெரிய பூதங்கள் நிற்பதைப்போல அச்சமூட்டின.
ஒட்டிய வயிறுடன் நாக்குத் தொங்க சிதைந்த வீட்டு வாசலிலே தனது எஜமானை எதிர்பார்த்துக் கிடக்கும் நாயைப் பார்க்க இன்றைக்கோ நாளைக்கோ அது செத்துவிடும்போலத் தெரிந்தது 'நாங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றோம்' என்று சொல்வதைப்போல நான்கைந்து பசுமாடுகளும் சில கன்றுகளும் பேருந்துக்கு எதிராக வீதியை ஊடறுத்துத் துள்ளிப் பாய்ந்தன. அந்தத்தாய் கண்களை மூடி சற்று அயர்ந்துவிட்டார்.
                                                                              அன்றிரவு வவுனியாவில் இருந்த விடுதி ஒன்றில் தங்கிவிட்டு காலையில் மகளைத்தேடும் படலத்தைத் தொடங்கினார்.கச்சேரிக்குச் சென்று மகளின் பெயர் முகவரியைக் கொடுத்து விசாரித்துப் பார்த்தார். உறுதியில்லாமல்தான் என்றாலும் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருக்கலாம் என அறிந்து கொண்டாள். துடித்துப் பதைத்தபடிதான் தன் பிள்ளையைப் பார்க்க மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குச் சென்றார்.
                                                முதல் பேருந்தில் ஏறி காலை 6.00 மணிக்கே முகாம் வாசலுக்கு வந்துவிட்டார் அந்தத் தயார். 9.00 மணிவரை அந்த முகாமிலுள்ள காவல் அதிகாரியின் தற்காலிக அடைப்பில் காத்துக்கிடந்தார். உணர்வுகள் அம்புகளைப்போல மனதுக்குள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன. தன் செல்ல மகள் எப்படி இருப்பாளோ? கடைசியாக அவளைப் பார்த்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தாயின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
                                                        சனங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். அந்தத் தாய்க்கு எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. தன் மகள் இப்போது எப்படி இருப்பாளோ? தன்னால் அவளை இனங்காண முடியுமோ? அவள் தன்னைக்கண்டுவிட்டு கதைக்காமல் போய்விடுவாளோ? என்றவாறான ஏக்கங்களுடன் முட்கம்பி வேலிக்குள் அந்தத்தாய் நிற்கின்றாள்.என் மகள் வருவாளா, வருகிறாளா? என அந்தத்தாயின் கண்கள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன. பதற்றமும் ஏமாற்றமும் ஏக்கமும் அவரின் மனதைப்போட்டு வாட்டி வதக்கிக்கொண்டிருந்தன.         --  தொடரும் ...............

மிதயா கானவி

இப்படியும் காதல்


                                       பிரங்கி வேட்டுக்களும் வெடிச்சத்தங்களும் இடைவிடாது தொடர்ந்து கொண்டேயிருந்த அமைதியற்ற அந்த பொழுதில் அதிகாலைப்பனிதடவும் செம்மையும்.முல்லைக்காற்றும் கூடவே தன் சுயத்தை இழந்து உஜ்ணத்தை தாங்கியிருந்தது.
                                                                                                                                              அஞ்சனா வேகமாகமிகவேகமாகஊசிமருந்துகளைஏற்றுவதற்குதாயராகிக்கொண்டிருந்தாள்.ள்அந்த அவசரசிகிச்சைவிடுதியின் மங்கலானவெளிச்சத்தைமேவியஏறிகணைகளின் ஏவும்போது தோன்றும் ஒளிகள்அனைவரையும்அச்சமூட்டிக்கொண்டேயிருந்தது.கால்களில் சில்லைக் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தமருத்துவபணியாளர்களில் அஞ்சனாவும் ஒருத்தியானாள்.ஊசியென்றாலே ஊரைக்கூப்பிட்டு கத்தும் குழந்தைகள் கூட அமைதியாய் கிடந்தனா் எல்லாம் புரிந்த ஞானிகளைப்போல் அவர்களரின் இயல்பை போர் பறித்து சென்று நிண்டநாளாயிருந்தது.
                                                               இருபதாவது கட்டிலில் வேறு ஒருநோயாளி படுத்திருப்பதைப்பாா்த்து நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டது அஞ்சனாவுக்கு “இதிலே இருந்த ஜயா எங்க போயிட்டார்  “என்றாளாள் உரமான தொனியில் சேலைன் போத்திலும் பிடுங்கப்பட்டுகிடந்தது .மருத்துவ உதவியாளன் ரமணனை தவிர அங்கு பதில் சொல்வதற்கு யாரும் முயலவில்லை
அக்கா“ இரவு விழுந்த செல்லோடதான் ஆள் கிண்டியிருக்கனும் பாா்த்திட்டு வாறன்”என்று சொல்லியபடியே அவசரமாய் விடுதியை விட்டு வெளியேறினான்.
                         இந்த மனுசன் எங்க போய்மாட்டிற்றோ வயித்துக்காயம்  நெஞ்சில் இரண்டுபக்கமும் குழாய் வயித்தில குருதிகசிவும் இருந்தது உடனவராட்டிக்கு காப்பாற்ற முடியாது .இந்தாளோட எவ்வளவு போராடித்தான் உயிரைப்பிடித்து கொடுத்ததை நினைக்க எரிச்சலாய்க்கிடந்தது.
ஆனாலும் மருத்துவமனைகளிலும்  உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் யாரிலும் பிழை சொல்லிவிடமுடியாதவளாய் மருத்துவமனையிருந்த வளாகத்தின் முன்பகுதியை அடைந்தாள். பலநுாறு நோயளர்களையும் கடந்து ஜயாவை சல்லடைபோட்டுதேடியதுஅஞ்சனாவின் கண்கள் மட்டு மல்ல மனமும்தான்.
சூறையாடப்பட்டு கிடக்கும் அந்த நிலத்தில் கண்ணுக்கு எட்டியதூரத்தில் தலை கொய்யப்பட்ட ஒற்றைபனையடி ஒரத்தில் இருக்கும் உருவத்தைக்கண்டு விரைந்தாள் .
நரைவிழுந்து காய்ந்து பறப்புக்கள் அற்றுபோன அவள் தலையை மெதுவாய் வருடிக்கொண்டிருந்தாா் ஜயா  ஊசி ஏற்றியபடியே இரத்தம் காய்ந்து போய்க்கிடந்த கட்டுதுணியால் கட்டியிருந்தது அவா் கைகள் .அந்த காட்சியை பாா்த்து மனம் நெகிழ்ந்தாலும் கோபம் உச்சத்தை அடைந்தவளாய் “நேற்று ஊசி ஏத்திவிடப்  பட்ட பாடு எங்க வந்து கிடக்கிறியள் கெதியண்டு எழும்புங்கோ ”ஊசி களரட்டும் தெரியும் இண்டைக்கு ஒப்றேசனும் செய்ய ஏலாது ” என வாா்த்தைகள அடிக்கிகொண்டு போனாள் ஜயா எதையும் பொருட்படுத்தாது பொக்கை வாய்திறந்து மழழை ஆகினாா் இவள் என்ர காதலி இவளைத்தேடித்தான் வந்தனான்  வாழும் போது கிடைக்காத காதல் சாகும் போது கிடைத்திருக்கு என்றேல்லாம் ஏதோ நிறைய தத்துவங்களைச் சொல்லிக்கொண்இருந்தாா். அஞ்சனாவுக்கு எதுவும் விளங்கவில்லை காதலை புாியும் நிலையில் அவள் அங்கு இல்லை

எழும்புங்கோ என கையைபிடித்து இழுத்தாள் .“எத்தனை பேரைவிட்டிற்று வந்து நிக்கின்றேன் வாங்கோவன் கெதியண்டு “என்று கத்தினாள் மருத்துவா்களின் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொர் உயிர்கள் வரழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை”  பிள்ளை இவளையும் வோட்டுக்க கொண்டுவரவா “கெஞ்சினார் அவசரசிகிச்சை விடுதியில் எண்பதுக்கு மேல் நோயர்கள் ஜயாக்கு தெரியம் தானே என்றவளின் முன்னால் வலது கையில் சேலைன் போத்தல் வெளியில் சலம் சேகரிக்கும் பைகுருதிபைகள் என்பவற்றுடன் இடது கையால் முதிர்ந்து போயிருந்த காதலியையும் பிடித்துக்கொண்டு முதிராத நினைவுகளுடன் நடக்கத் தொடங்கினாா்
விடுதியில் வந்து சேரவும் ஜயாவின் உடல் நிலைமை மோசமாகியது உடனடி சிகிச்சைகளை தொடங்கிவிட்டு
இன்று வரும் ஜ.சீ ஆா் .சீ கப்பலில் ஜயாவையும் அனுப்ப தாயா்படுத்திக்கொண்டிருந்தாள் ஆனாலும் அவர் தன் காதலியை இந்த இடத்தில் வீட்டுபோக மறுத்துவிட்டார் எவ்வளவு சொல்லியும் கேட்கவேயில்லை மருந்தில்லை ,குருதியில்லை ,இனி உங்கள் உயிரைத்தாக்குப்பிடி்க்க முடியாது என்ற அஞ்சனாவிடம்...........

                                   காய்ந்து தொங்கும் மாா்பகங்களுடனும் சுருக்குக்கள் விழுந்து முதிா்ந்து போன தன் உடலையும் சற்றும் பொருட்படுத்தாது வற்றிப்போய் இருக்கும் கை நாளங்களைக்காட்டி ”அம்மா என்னில் குருதியெடுத்து ஜயாவுக்கு ஏத்துங்கோ ” அவரை காப்பாற்றிவிடுங்கோ கோடி புண்ணியம் கிடைக்குமென  ”என சிறுபிள்ளையாகி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அந்த காதலி