Monday, 4 February 2013

தனிமை வரைந்த மடல் 2









என்னவனே......................
வெளியில் செமமழைகொட்டிக்கொண்டிருக்கிறது.மழைக்கீற்றுக்களின் ஆரோகனஅவரோகன தாளட்டுகளில் ஊா்அமைதியாகவே உறங்கிக்கொண்டிருந்தது.  புயலில் சிக்கிய இலையுதிர்காலத்து இலைகளைப்போல மனம்அலைந்து கொண்டிருந்தது.

இருளுக்கும் எம் உறவுக்கும் நிறையவே ஒப்பந்தங்கள் உன் விடியலை பறித்துக்கொள்வதும் என்துாக்கத்தை தொலைத்துவிடுவதும் இருளின்வழக்கமாகிவிட்டது இருந்தும்அலை சொல்லும் கதையை கரைகேட்பதுபோல் என் உணா்வுகளுடன் பயணிக்க இரவின் அமைதியால் தான் முடிகிறது
.பகல் பொழுதை கொள்ளையடித்துக்கொணடிருக்கும் சூரியனால் பைத்தியக்காறியெண்ட பட்டம் தான் தந்திடமுடியும். பளசுகளை மறக்கத்தான் நினைக்றன் முடியல்ல............ உன் கன்னுறாவி கோலம் கண்ணுக்க வந்துநிக்குதடா காற்றுக்கூட  ஆதரவுதரமறுக்க நீ  எதும்பேசவில்லை மௌனமாய் புன்னகைத்தாய்.............. ..மரணத்தைகாட்டிலும் மௌனம் கொடுமையானது .சீக்கிரமே புரிந்துவிட்டன் இதயத்தின் ஆழத்தில் உரக்க எதிரொளித்தது தெளிவாகவும்  அழுத்தமாகவும் இன்றைக்கம் நிலைத்துள்ளது.  நீா் நிறைந்து குழமாகிய ஈரவிழிகளுடன் நீ  கையசைத்தாய்................துயரம் எங்கள் உயிர்களை இனைத்தது கண்ணீரால் கழுவித்துாய்மையாக்கப்பட்ட காதல் காலம் கடந்தும் என்றும் அழகாகவே காத்திருக்கும் .......................

2 comments:

  1. கண்ணீர் மடல்... பிரிவின் வலியைச் சுவைக்க முடியாது... ஆனால் சுமந்து தான் ஆகவேண்டியுள்ளது... அருமை கானவி..

    ReplyDelete
  2. சொல்லாட்சி நன்று தோழி சற்றே பிழை நீக்கி எழுதினால் மெருகேறும் .......... இன்னும் கொஞ்சம் நிதானமாய் படைக்க முனைந்தால் அருமையாகும் தோழி ... வாழ்த்துகள்

    ReplyDelete