பிரங்கி வேட்டுக்களும் வெடிச்சத்தங்களும் இடைவிடாது தொடர்ந்து
கொண்டேயிருந்த அமைதியற்ற அந்த பொழுதில் அதிகாலைப்பனிதடவும்
செம்மையும்.முல்லைக்காற்றும் கூடவே தன் சுயத்தை இழந்து உஜ்ணத்தை
தாங்கியிருந்தது.
அஞ்சனா வேகமாகமிகவேகமாகஊசிமருந்துகளைஏற்றுவதற்குதாயராகிக்கொண்டிருந்தாள்.ள்அந்த அவசரசிகிச்சைவிடுதியின் மங்கலானவெளிச்சத்தைமேவியஏறிகணைகளின் ஏவும்போது தோன்றும் ஒளிகள்அனைவரையும்அச்சமூட்டிக்கொண்டேயிருந்தது.கால்களில் சில்லைக் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தமருத்துவபணியாளர்களில் அஞ்சனாவும் ஒருத்தியானாள்.ஊசியென்றாலே ஊரைக்கூப்பிட்டு கத்தும் குழந்தைகள் கூட அமைதியாய் கிடந்தனா் எல்லாம் புரிந்த ஞானிகளைப்போல் அவர்களரின் இயல்பை போர் பறித்து சென்று நிண்டநாளாயிருந்தது.
இருபதாவது கட்டிலில் வேறு ஒருநோயாளி படுத்திருப்பதைப்பாா்த்து நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டது அஞ்சனாவுக்கு “இதிலே இருந்த ஜயா எங்க போயிட்டார் “என்றாளாள் உரமான தொனியில் சேலைன் போத்திலும் பிடுங்கப்பட்டுகிடந்தது .மருத்துவ உதவியாளன் ரமணனை தவிர அங்கு பதில் சொல்வதற்கு யாரும் முயலவில்லை
அக்கா“ இரவு விழுந்த செல்லோடதான் ஆள் கிண்டியிருக்கனும் பாா்த்திட்டு வாறன்”என்று சொல்லியபடியே அவசரமாய் விடுதியை விட்டு வெளியேறினான்.
இந்த மனுசன் எங்க போய்மாட்டிற்றோ வயித்துக்காயம் நெஞ்சில் இரண்டுபக்கமும் குழாய் வயித்தில குருதிகசிவும் இருந்தது உடனவராட்டிக்கு காப்பாற்ற முடியாது .இந்தாளோட எவ்வளவு போராடித்தான் உயிரைப்பிடித்து கொடுத்ததை நினைக்க எரிச்சலாய்க்கிடந்தது.
ஆனாலும் மருத்துவமனைகளிலும் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் யாரிலும் பிழை சொல்லிவிடமுடியாதவளாய் மருத்துவமனையிருந்த வளாகத்தின் முன்பகுதியை அடைந்தாள். பலநுாறு நோயளர்களையும் கடந்து ஜயாவை சல்லடைபோட்டுதேடியதுஅஞ்சனாவின் கண்கள் மட்டு மல்ல மனமும்தான்.
சூறையாடப்பட்டு கிடக்கும் அந்த நிலத்தில் கண்ணுக்கு எட்டியதூரத்தில் தலை கொய்யப்பட்ட ஒற்றைபனையடி ஒரத்தில் இருக்கும் உருவத்தைக்கண்டு விரைந்தாள் .
நரைவிழுந்து காய்ந்து பறப்புக்கள் அற்றுபோன அவள் தலையை மெதுவாய் வருடிக்கொண்டிருந்தாா் ஜயா ஊசி ஏற்றியபடியே இரத்தம் காய்ந்து போய்க்கிடந்த கட்டுதுணியால் கட்டியிருந்தது அவா் கைகள் .அந்த காட்சியை பாா்த்து மனம் நெகிழ்ந்தாலும் கோபம் உச்சத்தை அடைந்தவளாய் “நேற்று ஊசி ஏத்திவிடப் பட்ட பாடு எங்க வந்து கிடக்கிறியள் கெதியண்டு எழும்புங்கோ ”ஊசி களரட்டும் தெரியும் இண்டைக்கு ஒப்றேசனும் செய்ய ஏலாது ” என வாா்த்தைகள அடிக்கிகொண்டு போனாள் ஜயா எதையும் பொருட்படுத்தாது பொக்கை வாய்திறந்து மழழை ஆகினாா் இவள் என்ர காதலி இவளைத்தேடித்தான் வந்தனான் வாழும் போது கிடைக்காத காதல் சாகும் போது கிடைத்திருக்கு என்றேல்லாம் ஏதோ நிறைய தத்துவங்களைச் சொல்லிக்கொண்இருந்தாா். அஞ்சனாவுக்கு எதுவும் விளங்கவில்லை காதலை புாியும் நிலையில் அவள் அங்கு இல்லை
எழும்புங்கோ என கையைபிடித்து இழுத்தாள் .“எத்தனை பேரைவிட்டிற்று வந்து நிக்கின்றேன் வாங்கோவன் கெதியண்டு “என்று கத்தினாள் மருத்துவா்களின் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொர் உயிர்கள் வரழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை” பிள்ளை இவளையும் வோட்டுக்க கொண்டுவரவா “கெஞ்சினார் அவசரசிகிச்சை விடுதியில் எண்பதுக்கு மேல் நோயர்கள் ஜயாக்கு தெரியம் தானே என்றவளின் முன்னால் வலது கையில் சேலைன் போத்தல் வெளியில் சலம் சேகரிக்கும் பைகுருதிபைகள் என்பவற்றுடன் இடது கையால் முதிர்ந்து போயிருந்த காதலியையும் பிடித்துக்கொண்டு முதிராத நினைவுகளுடன் நடக்கத் தொடங்கினாா்
விடுதியில் வந்து சேரவும் ஜயாவின் உடல் நிலைமை மோசமாகியது உடனடி சிகிச்சைகளை தொடங்கிவிட்டு
இன்று வரும் ஜ.சீ ஆா் .சீ கப்பலில் ஜயாவையும் அனுப்ப தாயா்படுத்திக்கொண்டிருந்தாள் ஆனாலும் அவர் தன் காதலியை இந்த இடத்தில் வீட்டுபோக மறுத்துவிட்டார் எவ்வளவு சொல்லியும் கேட்கவேயில்லை மருந்தில்லை ,குருதியில்லை ,இனி உங்கள் உயிரைத்தாக்குப்பிடி்க்க முடியாது என்ற அஞ்சனாவிடம்...........
காய்ந்து தொங்கும் மாா்பகங்களுடனும் சுருக்குக்கள் விழுந்து முதிா்ந்து போன தன் உடலையும் சற்றும் பொருட்படுத்தாது வற்றிப்போய் இருக்கும் கை நாளங்களைக்காட்டி ”அம்மா என்னில் குருதியெடுத்து ஜயாவுக்கு ஏத்துங்கோ ” அவரை காப்பாற்றிவிடுங்கோ கோடி புண்ணியம் கிடைக்குமென ”என சிறுபிள்ளையாகி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அந்த காதலி

No comments:
Post a Comment