வெறுமையாகியும்
சற்றும் பிசுபிசுப்பின்றி
வரண்டு கிடந்தது
தொண்டை
மீள்குடியேற்றப்படாத
என் சிறுதேசம் போல
சிதைந்த உணர்வுகளை
வலிந்திழுத்து ஒன்று சேர்த்து
அவள் இதயத்துடிப்பை
மீண்டும்
பரிசோதிக்க எத்தனித்தேன்
தோற்றுக் கொண்டது
என் பட்டப்படிப்புகள்
ரெலஸ்கோப்பினுள்
வலி வலியென துடித்துகொண்டது
அவள் இதயம்
குழம்பிய குட்டையாய்
தளம்பிய உணர்வுடன்
நீண்ட பெருமூச்சொன்று
நிமிர்ந்து பார்த்தேன்
மலா்ந்து உதிர்ந்த
மார்பவங்கள்
சட்டை கிழிசலால்
எட்டிப்பார்க்க
வெற்றிலை சப்பல்
கொடுக்கினுள் தடம்புரள
பொக்கை வாய்நிறைய
புன்னகையை
சமைத்துக்கொண்டிருந்தாள்
;நம்பிக்கையுடன்
பகலோனின் கீற்றுக்கள்
தகரக்கொடடில்களின்
கொடுரத்தை சப்பிதுப்பிவிட
தூரத்து
வேப்பமரக்காக்கா
உதிரும் சருகுகளில்
வெட்பம் தணித்து
இடைவிடாது கத்தியது
No comments:
Post a Comment