Wednesday, 6 March 2013
கனவுகளின் காலபோகம்.............கவிதை
காலபோகக் கனவுகளின்
வெகுமதியை -மழை
பறித்துச் சென்று
நீண்ட நேரமாகியிருந்தது.
கனவுகளை திண்ட
ஏமாப்பில்-
கோழிவிழுங்கிய
கருநாகம் போல்
அசைவற்று கிடந்தது
வானம்
ஊர்ப் பெண்டுகளின்
மாரடிர்பை போல்
விசிறியடித்தது
காற்று
தலைப்பிரசவத்திற்காய்
காத்திருந்த
நாள்லொன்றில்
தாய்மடி தொடாது
இறந்து போன
குழநதையின் தாய்போல
அலங்கோலமாய்
கிடந்தது
வயல்
ஆறுதல் தரமுடியா
துனைவனாய்
தேம்பியயேயழுதது.....நிலம்
வீட்டின் கூரையில்
எங்கோ ஓர் மூலையில்
தொங்கும் ஒட்டறைபோல்
காத்து கிடக்கிறது
ஏழைவிவசாயின்
காலபோகக்
கனவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
என் உணா்வில் கலந்த உங்களிற்கு மனம் நிறைந்த நன்றிகள்
ReplyDeleteReplyDelete