Monday, 10 June 2013

பிணக்காட்டின் இறுதி நாள்
...............................................

வானம் கந்தக புகைகளால்
வன்புணரப்பட்டு புவியெங்கும்
தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்த
விடிகாலைப் பொழுதொன்று
சாவின் முனகலையும் இழந்து
சத்தங்களை குறைத்து
சவமாய்க் கிடந்தது

சடங்குள் சம்பிரதாயங்கள்
அந்தரங்கங்கள் பிடிமானங்கள்
துணிச்சல்கள் எதுவுமற்று
மௌனமாகி முன்செல்லும்
பிசாசுகளின் பின்னால்
நடக்கத் தொடங்கினோம்

குழந்தைகளையும்
முட்களையும் ஒன்றாக்கி
வரிசைப்படுத்தியது
பிசாசுக் குட்டிகள்

ஈனக்குரல் எடுத்து
கதறும் ஓசை காற்றில்
ஏறித் தேவதைகளின்
வாசல் வரை சென்றது...

வான் இறங்கி வரவே இல்லை
எந்த தேவதைகளும்...

எம் தெருக்களில்
கற்களும் முட்களும்
அடங்கிப்போக
பிணங்களும்
சதைத்துண்டங்களும்
இடையுறாகியது கால்
வழியில்..

பெரும் வெடி ஓசை
அடங்கி சன்னங்கள்
மட்டும் சடசடக்க
வீதி வீதியாய்
முனங்கல்கள் கேட்டன

முல்லை--வாய்க்காலில்
நிறைந்த குருதியும்
வட்டு வாகலில் மிதந்த
பிணங்களும்..........................

ஒருதுளி தண்ணீருக்காய்
வெம்பிய உயிர்கள்
தேடுவார் அற்று
உருக்குலைந்து போனது

இத்தனை காலம்
ஓடிமறைந்தாலும்
வற்றாது நெஞ்சில்
நஞ்சாய் எரிகிறது

உயிருக்காய்
ஊசலாடிக் கொண்டிருந்த
அன்றைய நாளை
பிசாசுக்களின் வாரிசுக்கள்
சாத்தான்னளின் திருமண
நாளாக்கி இரத்த விருந்து
உபசரித்துக் கொண்டது..

.
மிதயா.கானவி)

6 comments:

  1. ஈனக்குரல் எடுத்து
    கதறும் ஓசை காற்றில்
    ஏறித் தேவதைகளின்
    வாசல் வரை சென்றது...

    வான் இறங்கி வரவே இல்லை
    எந்த தேவதைகளும்...---வலி தாங்கி வரும் வார்த்தைகள் இதயத்தை பிழிகிறது .

    ReplyDelete
    Replies
    1. -வலி தாங்கி வரும் வார்த்தைகள் இதயத்தை பிழிகிறது .என் உணா்வில் கலந்த உங்களிற்கு மனம் நிறைந்த நன்றிகள்

      ReplyDelete

      Delete
  2. எம் தெருக்களில்
    கற்களும் முட்களும்
    அடங்கிப்போக
    பிணங்களும்
    சதைத்துண்டங்களும்
    இடையுறாகியது கால்
    வழியில்..வலிசுமந்த நாட்கள்.மறந்திடமுடியா வடுக்கொண்ட துயரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வலிசுமந்த நாட்கள்.மறந்திடமுடியா வடுக்கொண்ட துயரங்கள்.நன்றிthisaa gnana

      Delete
  3. உயிருக்காய்
    ஊசலாடிக் கொண்டிருந்த
    அன்றைய நாளை
    பிசாசுக்களின் வாரிசுக்கள்
    சாத்தான்னளின் திருமண
    நாளாக்கி இரத்த விருந்து
    உபசரித்துக் கொண்டது.. ///// கவிதையை எப்படிக் கோர்ப்பது என்பதை மிகவும் நுணுக்கமாகவே கையாழுகின்றீர்கள் . உங்கள் கவிதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . தொடரட்டும் உங்கள் கவிதைமழை .

    நேசமுடன் கோமகன்

    ReplyDelete
  4. நேசமுடன் கோமகன் என் உணா்வில் கலந்த உங்களிற்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete