Sunday, 30 June 2013

தூரத்துத் தெருநாய்கள் கவிதை

தூரத்துதெருநாய்கள்

செப்பணிடப்பட்ட 
செம்மண் வீதியெங்கும் -தூரத்து
தெரு நாய்கள் 

குட்டை வாலை மறைத்து -நீண்ட
சட்டை போட்டு
கறுப்பும் சிவப்புமாய்...........

நிறமற்றுப் போன
எம்மூா் தெருக்கள்-எல்லாம்
விசிறப்பட்டன
பொதியிடப்பட்டமாமிசங்கள்


சிவப்பருசி வடித்த கஞ்சியை
பார்த்து பார்த்து
பசிமறந்திட
வேலிக் கதிகாலின்
சீமைக் கிளுவையின்
ஒரு துளி நிழலில்
காவல் செய்தது

இன்னும் விடியவில்லை- என்று
இரகசியமாய் கூவிற்று
இறக்கை பிடுங்கப்பட்ட குயில் பேடு -ஒன்று

எம் மௌனங்களை
உடைக்க சொல்கிறாய் அது
உனக்காக உடைவதாய் இல்லை -என
மண்பிரன்டி
துடிப்படங்கிப் போனது
ஊர்மனை நாய்கள்

தெருநாய்கள் அலட்டிக் கொண்டது


இது தான் தம் வீரமென்று.............................

No comments:

Post a Comment