நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்
உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்
காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்
அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்
இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது
நீண்ட போரின்பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்
இருந்தும்
துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப் பிடித்த
காதலில் தான் ................
காதலில் மட்டும் தான் தனிமயயும் ரசிக்க முடியும்.
ReplyDeletereyaly thanks u
DeleteSupper................................
ReplyDeletethanks u
Deletenice
ReplyDeletemm nanri
Deleteதனிமைத் துயர் நிரம்பி வழியும் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeletenanrikal
Deleteஅது என்னை
ReplyDeleteபாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்
மிக எளிமையான ஆனால் அர்த்தம் நிறைந்த வரிகள். மெல்லியதாக இழையோடும் சோகம் விழுங்கிப்போகிறது இறுதியில் வாழ்த்துக்கள் அக்கா
unkal karuththukku nanri
Delete