Wednesday, 30 January 2013

பிரியமானவன்...............கவிதை

 உன்னுடன்..............



வாழ்ந்த நாட்கள்
கொஞ்சம்தான் - எனினும்
கோடி நாட்கள்
சுயநலமற்று
வாழ்ந்த சுகம்.
 
எப்படி மறப்பது
உன்னையும்
நீ அள்ளித் தந்த
பல வருட
ஆளுமை
அறிவையும்…….

நீ இப்போ என(ம)க்கு
இல்லையென்ற போது
நெஞ்சத்தின் தனிமை
நெருஞ்சி முள்ளாய்............
வலிக்கிறது இதயம்.

என் உயிரினும்
மேலானவனே,
உன் மூச்சுக்காற்றில்
வாழ்ந்தவர்கள் நாம்.
ஆனாலும்
உன் அந்த முடிவை
என்னால் நம்பவே
முடியவில்லை.

அந்த ஓர் நிமிடத்தில்
எ(ம்)ன் இதயமே
துடிப்பிழந்து போனது.
எ(ம்)மை
தவிக்கவிட்டுச் சென்றதெங்கே…..?

என்னவனே
உறவைப்பிரிந்து,
உணவை ஒறுத்து,
உறக்கத்தை தொலைத்து,
உன்னையே நம்பிய
எம்மை
இன்னும்
என்ன செய்யப்போகிறாய்.

இனியவனே,
யார் யாரோ
உன்னைத்
தூற்றுகிறார்கள்.
அறியாதவர்கள்
அலம்புகிறார்கள்.
நானோ இப்பவும்
உன்னை
விசுவாசமாய்
காதலிக்கிறேன்.
பிரிவின்போது தான்
அதிகம் தெரிகிறது
சுதந்திரம் பறிபோனதன்
வலியின் கொடூரம்.

நீ அழகானவன்.
பெரும் ஆளுமையானவன்.
அட்டவதானியும் கூட.
ஆனால்
அகங்காரமற்றவன்.
இரக்கமானவன் - ஆனாலும்
எம் கண்ணில்
இரத்தம் கொப்பளிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய்
அன்பே………….?

காலத்தின் தேவையால்
காணாமல் போனாயா?
நீ இல்லையேல் - இனி
எம் வாழ்வில்
மழையே இல்லையென
தடம் புரள்கிறது –
நிஜமான  நினைவுகள்
நெஞ்சக்கூட்டை
பலமாக அழுத்துகின்றன…………

ஆனாலும்
நீ உயிருடன்
இருக்கிறாய் என்ற
ஒற்றைச் சொல்லுக்காய்
காத்திருக்கிறேன்
கைகளில் விலங்கிடப்பட்டு................

 உன் பிரியமானவள்
 - மருத்துவமனை நிலா .நன்றி2010 ஈழநேசன் இணையத்தில் வெளிவந்த என் கவிதை

3 comments:

  1. ///ஆனாலும்
    நீ உயிருடன்
    இருக்கிறாய் என்ற
    ஒற்றைச் சொல்லுக்காய்
    காத்திருக்கிறேன்
    கைகளில் விலங்கிடப்பட்டு.....///
    காதல் பலவிதம், அதில் இதுவும் ஒரு விதம்... ஒருவரால் அல்ல ஒரு சமூகத்தால் காதலிக்கப்பட்டவன்... நானும் காத்திருக்கிறேன் தோழி உன்னோடு சேர்ந்து..

    ReplyDelete
  2. மிகவும் நன்றி தோழி என் உணா்வோடு நீயும் காத்திருக்றாய்..............

    ReplyDelete