2
- முகாமிலும் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக இருந்தது. ஒரேயொரு குழாய் கிணறு. அதில் எப்போதும் குடிதண்ணீருக்கு அடிபிடியாகவே இருக்கும். வன்னியில் எவ்வளவோ ஒற்றுமையாகத்தான் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள்மீதான தொடர் சோதனைகளும் வேதனைகளும்தான் அவர்களை மாற்றியதோ என்னவோ? பலர்மனிதத்தை தொலைத்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். குடிப்பதற்கே தண்ணீர் அரைகுறைதான். அப்படியானால் குளிப்பதற்கு? ஆண்கள் ஓரளவு சமாளித்தார்கள். பெண்கள் நிலைதான் எப்போதும் தீராத பிரச்சினையாக இருந்தது. எந்த மறைவுமற்ற இடத்தில் வெட்ட வெளியில் நின்று குளிக்கவேண்டி இருந்தது. சில பெண்கள் இருட்டும்வரை காத்திருந்து இரவில் குளித்தார்கள். அதற்கு உடல்நிலை இடந்தராத பெண்கள் பட்டப்பகலில் பலர் பார்க்கக் குளிக்கவேண்டி இருந்தது. அவ்வாறான சூழலில் தமிழ்ச்சமூகத்தின் அருமையான பண்புகள் மாறிக்கொண்டே இருந்தன.
- விடியலைச்சொல்ல அங்கு எந்தச் சேவலும் கூவுவதில்லை. காவலுக்கு நிற்கும் படையினரின் பலமான சிங்களக் குரல்கள் காதில் விழ, அன்றும் உறக்கம்கலைந்து எழுந்தான் திவா. அவசர அவசரமாக இரண்டு வாளிகளுடன் கிணற்றடிக்குச் சென்றான். அங்கு ஏற்கெனவே இருநூறுக்கு மேற்பட்ட வாளிகள், குடங்களின் வரிசை நீண்டிருந்தது. அந்த வரிசையில் தனது வாளிகளையும் வைத்துவிட்டுக் காத்திருந்தான். ஓவ்வொருவரும் தமது வாளிகளிலும் குடங்களிலும் தண்ணீரைப் பிடிக்கப் பிடிக்க, மற்றவர்கள் தமது வாளிகளையும் குடங்களையும் நகர்த்தி நகர்த்தி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது அந்த முகாமே பரபரப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. விடியல் மெல்ல மெல்லப் பகலாக, சூரியன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
- 'அப்பாடி என்ர வாளி கிட்டவா வந்திட்டுது' என்ற பெருமூச்சுடன் முன்னிருந்த வாளி நகர அவனும் தனது வாளிகளை நகர்த்தினான். அப்போதுதான் சற்றும் எதிர்பாராமல் அவளைக் கண்டான். அவனது கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை.
'இவள் அவள்தானா?'
ஒழுங்காக வாரப்படாத தலைமுடி. செருப்பில்லாத கால்கள். அழுக்கான ஆடை. முன்னரைவிடவும் மிகவும் மெலிந்துபோயிருந்தாள்.
இவள் எப்படி அவளாக இருக்க முடியும்? இதயத்தில் எழுந்த அவசர எண்ணத்திலும் படபடப்பிலும் தன்னையிழந்து மனங்குளம்பினான் திவா.
'அது அவளே தான்'
'ஐயோ, எப்பிடிக் கூப்பிடுறது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறாள்? ஆ. ஆ... என்னயப் பாக்கிறாள்.... ஏன் சிரிக்கக்கூட இல்லாமல் ...... என்னயத்தான் கவனிச்சுப் பாக்கிறாள்.... அதென்ன அவளுடைய பார்வை அப்படியொரு மாதிரியாய்........ ஐ. சீ, அவளுக்கு மூளை தட்டிற்றோ???'
என்றெல்லாம் அச்சாணி உடைந்த சில்லுப்போல அவனது மனம் தடம்புரண்டோடியது. தன்னை ஒருநிலைப்படுத்த இயலாமல் தவித்தான்.
'சே. எனக்கு என்ன நடந்தது? எதுக்காக இப்பிடி உணர்ச்சிவசப்படுறன்?' என்றவனின் நினைவலைகளை அவளது முறை என்பது குளப்பியது. ஆமாம் அடுத்து தண்ணீர் நிரப்ப வேண்டியள் அவள்தான். திவா பாய்ந்துசென்று அவளது வாளிகளை தண்ணீரால் நிரப்பினான். பதிலுக்கு நன்றி என்று ஒற்றைச்சொல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். அதை அவள் யாரோ ஒருவனுக்கு சும்மா கடமைக்காகச் சொல்வதைப்போலச் சொல்லிவிட்டுப் போகிறாளே என்று கவலையாக இருந்தது அவனுக்கு. தனது வாளிகளிலும் தண்ணீரை நிரப்பி தூக்கிக்கொண்டுவந்து, தேடியபோது அவளைக் காணவில்லை.
அவனை அறியாமலேயே அவனது இதயம் படபடவென அடித்துக்கொண்டு கிடந்தது. இரண்டு வாளிகளும் வழமைக்கு மாறாக மனப்பாரத்துடன் சேர்ந்து கனத்தன. கொட்டிலில் கொண்டுபோய் வாளிகளைவைத்துவிட்டு குழம்பிய மனதுடன் பைமீது தலைவைத்துச் சரிந்துகிடந்த அவனை அந்த மூதாட்டி கவனித்திருக்கவேண்டும்.
'ஏன் மோன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? உடம்பு கிடம்பு சரியில்லையா?' பாட்டி அக்கறையோடு விசாரித்தார்.
'இல்லப் பாட்டி. ஒண்டுமில்ல.' என்று சமாளித்தான்.
'பிள்ள காலங்காத்தால தண்ணிக்கு நிண்டு களைச்சுப் போட்டுது. எல்லாம் எங்கட விதி?' என்று தமிழரின் விதியை நொந்துகொண்ட பாட்டி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் சொன்னார்,
'கவலப்படாத தம்பி. ஆண்டவன் கண் திறப்பான்.'
பாட்டி சொன்ன வார்த்தைகளில் எதுவும் அவனது காயத்திற்கு மருந்திடவில்லை. எனினும் அந்தப்பாட்டி சாப்பிட அழைத்தபோது அதை அவனால் மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில் பாட்டியிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.
உணவுத்தட்டுடன் இருந்தவனின் நினைவெல்லாம் அவளைச்சுற்றியே சுழன்றுகொண்டிருந்தன. சொந்த வீட்டில் அவன் சாப்பிடும்போது வட்டமடித்துப் பறந்துதிரியும் வளர்ப்புக் கோழிகளும் குஞ்சுகளும். கொஞ்சம் தள்ளிநின்று செட்டை அடித்து வீறாப்புக் காட்டும் தலைமைச் சேவல். செல்லமாகக் காலைக் கடிக்கும் குட்டி நாய். இப்போது அவனிடம் எதுவுமேயில்லாதது பெரும் தனிமையை உணர்த்தியது. சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை யாரும் அவதானிக்கவில்லை. பாட்டியும் நிலத்தில் சரிந்துவிட்டார். அவன்முன் பிளாஸ்டிக் தட்டிலிருந்த அவித்த கடலையை கொண்டுபோய் குப்பைவாளியில் கொட்டினான்.
இன்று எப்படியும் அவளைத் தேடிக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற ஏக்கத்துடன் முகாமில் அறிமுகமாகிவிட்ட நண்பன் ஒருவனிடம் சென்றான் திவா. தனது சொந்த விடயங்களை யாருடனும் அலட்டிக்கொள்ளாத சுபாவம் கொண்டவன்தான் திவா. ஆனாலும் அவளை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற தவிப்புடன் நண்பனைத் தேடிச்சென்றான்.
'கரன்'
'என்ன மச்சான் சொல்லு. ரெண்டு நாளா ஆளக்காணேல்ல'
'கொஞ்சம் பிஸி'
'என்ன பிஸியோ?' என்று சிரித்தான் கரன்.முகாமில் இருப்பவனுக்கு பிஸியா என்றது அவனது குரல் கேலியாக.
'கரன் நான் ஒராளக் கண்டுபிடிக்க வேணும். உன்னால அதுக்கு உதவ முடியுமா சொல்லு'
'நிச்சயம். சொல்லுடா. யாராள்?'
திவா அவளின் அடையாளத்தைச் சொன்னான்.
'சரியடா. கவலப்படாத. ட்ரை பண்றன். அவட பேரையும் அட்ரசையும் சொல்ரா உடன ஜி.எஸ்ஸிட்டப் போய் விசாரிச்சிட்டு வாறன்.' என்றான் நண்பன்.
திவாவின் இதயத்தில் சுள்ளென வலித்தது, அவன் எப்படி பெயர் தெரியாது என்று சொல்ல முடியும்? சொன்னால் கரனே கேலியாய் நினைக்க மாட்டானா?
'வேண்டாம் கரன். பிறகு பாப்பம்' என்று தடுமாறினான் திவா. பின்பு
'ஜி.எஸ்ஸிட்ட எல்லாம் எதுக்குடா கரன்? நானும் நீயும் சும்மா முகாமுக்குள்ளயே தேடுவமேடா.' என்றான்.
இருவரும் முகாமின் இண்டு இடுக்கெல்லாம் அவளைத்தேடி அலைந்தார்கள். அவளோ அவர்களது கண்களில் படவே இல்லை.அன்று முழுவதும் தேடியும் அவள் கிடைக்கவில்லை. அவளை இதேமுகாமில் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. அந்த நம்பிக்கையோடும் அடுத்தநாள் அவளை கண்டுபிடித்துவிடப்போகும் எண்ணத்திலுமாய் கொட்டிலுக்கு வந்தான்.-
மித்யா கானவி

No comments:
Post a Comment